Tuesday, November 2, 2010

யாரிந்த பெண்தான் என்று கேட்டேன்!!!



புதிதாய் பூத்த ரோஜாவுக்கு முத்தம் கொடுத்தாய்
ரோஜா செடி முட்களை உதிர்த்துக் கொண்டது


சுட்டெரிக்கும் சூரியனை நமஸ்காரம் செய்தாய்
பனி மழை பெய்கிறான் அவன்

தட தடவென விழும் அருவியில் தலை நனைத்தாய்
நீர்வீழ்ச்சி பூவீழ்ச்சியானது

அலைகடலில் கால் பதித்தாய், உள் செல்லாமல் 
உன் காலடியிலே நின்றது அலை

கரடு முரடான பாதையில் நடந்தாய், பாதை
பளிங்காய் ஆனது

பச்சைக் கிளியுடன் கொஞ்சினாய், அது 
பஞ்சவர்ணக் கிளியானது

காக்கைக்கு சோறு கொடுத்தாய், அன்று முதல்
அது குயில் போல் கூவுகிறது

இயற்கையை இடம் வலமாய் திருப்பிப் 
போடுகிறாயே, நீ என்ன..........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாரதிராஜா படக் கதாநாயகியா ;-) !!! 

                    

நட்புடன், 
உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

22 comments:

  1. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

    ReplyDelete
  2. //பாரதிராஜா படக் கதாநாயகியா//
    ஹா ஹா...
    ஏன் இப்படி :)

    பாலாஜி.

    ReplyDelete
  3. சிவா, சூப்பரா இருக்கு. எனக்கும் ஏதோ கொஞ்சம் தோணுச்சு.கீழே கிறுக்கி இருக்கேன் !

    \\தட தடவென விழும் அருவியில் தலை நனைத்தாய் நீர்வீழ்ச்சி பூவீழ்ச்சியானது\\

    தட தடவென விழும் அருவியில் தலை நனைத்தாய் நீர் வீழ்ச்சி பூவீழ்ச்சியானது

    பட பட வென வரும் பாகீரதி அரனின்
    சடை பட்டு ஊற்றாக மாறுவது போல

    \\அலைகடலில் கால் பதித்தாய், உள் செல்லாமல்
    உன் காலடியிலே நின்றது அலை\\

    அலைகடலில் கால் பதித்தாய், உள் செல்லாமல்
    உன் காலடியிலே நின்றது பெண் அலை


    பின் வந்த ஆண் அலைக்குக் கொண்டாட்டம்
    பெண் அலையைத் தொட்டு விட்ட மகிழ்ச்சி

    முடிவு இந்த மாதிரி இருந்து இருக்கலாம்

    உன்னைப் பற்றி ஏதோ பேனா கொண்டு
    கவிதை கிறுக்க ஆரம்பித்தேன்
    முடித்து விட்டுப் பார்த்தால் உன் உருவம் ஓவியமாக

    பேனாவும் தூரிகை ஆகிவிடுகிறது உன்னைப் பற்றி எழுதும் போது.


    ஹை ஜாலி, நானும் கவிஞன் ஆகிட்டேன் !

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
  5. இயற்கையை இடம் வலமாக திருப்பிப்போட்ட கவிதை நல்லா இருக்கு.
    அந்தப் படத்திற்காக எழுதிய கவிதையாக கடைசி வரியில் முடித்திருக்கிறீர்கள்.
    ஒரு ஜோக்கு சொன்னா ஓ.கே வா "ரஞ்சிதா" கூட பாரதிராஜா பட கதாநாயகிதான்.... ;-) ;-) சும்மா சோக்கு...... ;-)

    ReplyDelete
  6. சூப்பர் சிவா!!

    நீங்களும் கவிஞராயிட்டீங்க.. கவிதை நல்லாயிருக்கு..
    :-))

    ReplyDelete
  7. //சுட்டெரிக்கும் சூரியனை நமஸ்காரம் செய்தாய்
    பனி மழை பெய்கிறான் அவன்//

    இது கலக்கலா இருக்குங்க ..

    ReplyDelete
  8. நல்லாத்தான் எழுதுறீங்க சிவா! கடைசியில வம்பு தானே? ரசிச்சேன் ..கூடவே கோபியின் கலக்கலையும்!

    ReplyDelete
  9. நன்றி வெறும்பய, சித்ரா & சதீஷ் குமார்!

    கோபி - கலக்கல்! உங்க அளவுக்கு எனக்கு யோசிக்க தெரியாது.... இது சும்மா :-)

    நன்றி RVS! ரஞ்சிதாவின் முதல் பட கெட்டப்பே இதுதானே!

    நன்றி பாபு & செல்வக்குமார்!

    நன்றி மோகன்ஜி! முதல்லே சீரியாசாதான் ஆரம்பிச்சேன்... கடைசியில் ஏனோ என்னை அறியாமல் காமடி ஒட்டிடிச்சு!

    ReplyDelete
  10. அருமையான படமும் அருமையான கவியும் சகோதரா....

    ReplyDelete
  11. சூப்பர்.. அதிலும் கடைசி வரி... இன்னுமே சூப்பர்... :-))

    ReplyDelete
  12. காக்கைக்கு சோறு கொடுத்தாய், அன்று முதல்
    அது குயில் போல் கூவுகிறது///

    அது சரி....

    ReplyDelete
  13. சிவா கவிதை கலக்கல் !!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும், எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. நன்றி ஆனந்தி, சௌந்தர், தினேஷ்குமார் & அப்துல் காதர்!!!

    நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. நல்லயிருக்கு கவிதை.

    ReplyDelete
  16. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. நல்லா இருக்கு.. நல்லாவும் இருக்காங்க..

    ReplyDelete
  18. நன்றி விமலன், ஆனந்தி & சிநேகிதி!!!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!