Sunday, December 5, 2010

நண்பனின் காதலி!


என்ன மாப்பிள்ள! தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற!

இது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்ததுடா.....அது சரி! என்னடா இது புது கதையா இருக்கு.... யாரு அது எனக்கு தெரியாம?

உனக்கு தெரியாம எப்படிடா? கண்டிப்பா சொல்றேன்... நீதான் என் கல்யாண வேலைய முன்னாடி நின்னு செய்ய போறே...

கல்யாணமா... உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? பொண்ணு யாரு, என்ன? குடும்பம் எப்படி? பழக்க வழக்கம் எப்படி? சும்மா கல்யாணம் கில்யாணம்னு பேசிட்டு இருக்காத!

எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு... அப்புறம் வேறென்னடா வேணும்?

இன்னும் நெறைய வேணும்... நீங்க ஓரளவுக்கு இந்த ஊருல வசதியான கவுரவமான குடும்பம், அந்த அளவுக்கு இல்லாட்டியும் பொண்ணு வீட்டுல ஓரளவுக்காவது இருக்கனும்ல...

இங்கே பாரு, எனக்கு இந்த அந்தஸ்து,கவுரவம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை... ஆனாலும் நீ சொன்ன எல்லாம் அவங்க வீட்டுல எங்களுக்கு சமமாவே இருக்கு.

சரி! காசு பணம் இருக்கு... விடு அவங்க குடும்பம் எப்படி... கூடப் பிறந்தவங்க எத்தன பேரு? நீ ஒரு பையன்டா! உன்னை வளைச்சி போடுறதுக்கு பிளான் பண்ணுவாங்க, ஜாக்கிரதை!

நீ என்னமோ ரொம்ப பேசுற இன்னைக்கு! அவங்க அப்படிலாம் இல்லை, அவளோட அப்பா நெறைய நிலம் நீச்சுன்னு வசதியாத்தான் இருக்காரு, அன்பான அம்மா... ஒரே ஒரு அண்ணன், என்ன அவன்தான் வேலைக்கு ஒன்னும் போகாம ஊரை சுத்திகிட்டு இருக்கான்..

ஏன்டா.... ஏழு கழுதை வயசில இன்னும் அவ அண்ணனே வேலைக்கு போகலன்னு சொல்றே! இதுல இருந்தே அந்த குடும்ப லச்சனமும் அவங்க பிள்ளை வளர்ப்பும் தெரியுதே!

நீ ஏதோ முடிவு பண்ணிட்டு பேசுற.... உன்கிட்ட பேசி பிரயோசனம் இல்லை, நாளைக்கு பார்க்கலாம்.

நான் எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சிக்கடா! உன் வாழ்க்கையில எல்லாம் நல்லபடியா நடக்கனும்னுதான் சொல்றேன்... வீட்டுல மூத்த பையன் பொறுப்பில்லாம இருந்தா அந்த பொண்ணு எப்படிடா இருக்கும்? நீ அவ கூட வெளிய எல்லாம் போயிருக்கியா?

நாலைஞ்சு தடவ படத்துக்கு போயிருக்கேன்... அடிக்கடி எங்கேயாவது வெளிய சாப்பிட போவோம்...

நம்ம ஊரு பொண்ணுங்க இந்த மாதிரி வெளிய சுத்தவே மாட்டாங்க... எனக்கு ஒன்னும் சரியா படல.... வேற ஏதாவது நடந்திருக்கா உங்களுக்குள்ளே?

வேற ஏதாவதுன்னா?

நடிக்காத டா!

இதெல்லாம் உன்கிட்ட சொல்லத் தேவை இல்லை... பரவா இல்லை... ஒரு நாலைஞ்சு தடவ முத்தம் கொடுத்திருக்கோம்... அவ்ளோதான்...

அவ்ளோதானா!!!? நம்ம ஊரு கிராமம் மாப்பிள்ளை... இந்த அளவுக்கு ஒரு பொண்ணு தைரியமா இருக்குன்னா கண்டிப்பா நல்ல பொண்ணுன்னு தோணல... என்னை தப்பா நெனச்சுக்காதே!

இப்போ என்ன சொல்ற? இந்த பொண்ணு வேணாம்னு சொல்றியா? எங்க வீட்டுல நான் இன்னைக்கு பேசலாம்னு நெனச்சேன்... நீ ரொம்ப குழப்புறே!

விட்டுத் தள்ளுடா இந்த கழுதைய.... உனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும்டா... உங்க வீட்டுல கல்யாண பேச்சு எடுத்தா நானே வந்து பேசலாம்னு நெனச்சேன்... என் தங்கச்சி இருக்கா... உனக்கும் அவளை நல்லா தெரியும், எல்லா விதத்திலும் பொருத்தமா இருப்பா... எங்க வீட்டுக்கு வந்து உங்க அப்பா அம்மாவைப் பேச சொல்லு...

நான் கொஞ்சம் யோசிக்கணும்...

ஏன்டா? என் தங்கச்சிக்கு என்ன கொறச்சல்? இல்ல எங்க குடும்பத்துக்கு தான் என்ன கொறச்சல்?

நீதான் இவ்ளோ நேரம் ஆயிரம் குறை சொன்னியேடா... இதுக்கு மேல என்ன குறை வேணும்....

"ங்கே!!!"

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

38 comments:

 1. நன்றி அஹமது!

  நன்றி nis!

  ReplyDelete
 2. சூப்பர் கலக்கிடீங்க தல

  ReplyDelete
 3. கலக்கல் சிவா

  ReplyDelete
 4. சிவா.. ரொம்ப நல்லாயிருக்கு..

  ReplyDelete
 5. நன்றி தினேஷ் !

  நன்றி சண்முகவேல்!

  நன்றி பாபு!

  ReplyDelete
 6. நண்பனின் தங்கச்சி!!!
  குறுங்கதை நல்லா இருந்தது.. ;-)

  ReplyDelete
 7. குறுங்கதை நல்லா இருந்தது

  ReplyDelete
 8. நன்றி ராதாகிருஷ்ணன்!

  ReplyDelete
 9. கதை கதையாம் காரணமாம் காரணத்தில் தோரணமாம்... அருமைங்கோ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.

  நனைவோமா ?

  ReplyDelete
 10. இதுவல்லவா நட்பு...

  ReplyDelete
 11. இதுக்கு பேர் தான் சொந்தமா சூனியம் வச்சிக்கிறதா ;)

  ReplyDelete
 12. நன்றி பிரபா!

  @ பாலா: :-))

  ReplyDelete
 13. கதை நல்லாருக்கு........ ரசித்து படித்தேன்..........

  ReplyDelete
 14. //ஏன்டா.... ஏழு கழுதை வயசில இன்னும் அவ அண்ணனே வேலைக்கு போகலன்னு சொல்றே! இதுல இருந்தே அந்த குடும்ப லச்சனமும் அவங்க பிள்ளை வளர்ப்பும் தெரியுதே!

  நீ ஏதோ முடிவு பண்ணிட்டு பேசுற.... உன்கிட்ட பேசி பிரயோசனம் இல்லை, நாளைக்கு பார்க்கலாம்.//

  உண்மைலேயே அவரு என்னமோ பிளான் பண்ணிட்டருங்க .,
  எதுக்கும் சூதானமா இருக்குங்க ..!!

  ReplyDelete
 15. //நீதான் இவ்ளோ நேரம் ஆயிரம் குறை சொன்னியேடா... இதுக்கு மேல என்ன குறை வேணும்....

  "ங்கே!!!"//

  செம செம ., கடைசில இப்படி ஒரு திருப்பமா ..?
  கலக்கிட்டீங்கோ .!!

  ReplyDelete
 16. சூப்பர் சிவா...:))

  ReplyDelete
 17. சூப்பர் சிவா...:))

  ReplyDelete
 18. எதார்த்த நடை ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. சரியான பாடல்களை கண்டுபிடித்ததால் உங்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளேன். என் தளத்தில் பின்னூட்டப்பகுதியில் பார்க்கவும்
  http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

  ReplyDelete
 20. கதை நல்லாயிருக்குங்க

  ReplyDelete
 21. ரஹீம் கஸாலி- யிடம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. --------------------------------------------
  ஏன் தொடர்ந்து எழுதலை?? எழுதவாங்க பாஸ்!!
  --------------------------------------------
  உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
  http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete
 23. என்ன சிவா,என்ன ஆச்சு? போஸ்ட் எதுவும் இல்லயே? நல்லா இருக்கிங்களா சிவா?

  ReplyDelete
 24. Shiva..R u ok?--am very good...

  ReplyDelete
 25. முடிவா என்ன சொல்ல வற்றீங்க...?

  http://zenguna.blogspot.com

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!