Saturday, October 30, 2010

துபாய் காசும்! துன்பியலும்!!



"என்னப்போ! சொவமா இருக்கியா! எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா! பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா!" என்றார் ஊர்ப் பெரியவர் சுடலை.

"எல்லாம் சவுரியம்தான் அய்யா! நீங்க எப்படி இருக்கீக... விவசாயமெல்லாம் எப்படி போகுது?" என்றேன்.


"அதுக்கென்னப்பா குறைச்சல், மழை பொய்க்காம இருக்கிற வரைக்கும் நம்ம வண்டி ஓடும்... சரி சரி, எத்தனை நாளு லீவுல வந்திருக்கே ?"

"ரெண்டு மாசம் அய்யா! பாக்கலாம் என்ன நடக்குன்னு! அப்புறமா வீட்டுப் பக்கம் வாரேன்"

அவர்ட்ட சொல்லிட்டு கூட வந்த அண்ணன்கிட்ட "என்னண்ணே! வீட்டு வேலை எப்படி நடக்குது...பிரச்சினை ஒன்னும் இல்லையே!"என்றேன்.

"அதில என்னப்பா பிரச்சினை! ஒன்னும் இல்லை, இன்னொரு தடவ நீ வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திட்டா முடிச்சிரலாம்... அதோட பக்கத்தில கெடக்கிற இடத்திலும் ஒரு சின்ன குச்சில் மாதிரி கெட்டிரலாம்"

"தெரியலைண்ணே! எனக்கு திரும்பி போவ மனசே இல்லை . இந்த தடவை இப்படியே கையில இருக்க காசை வெச்சிக்கிட்டு ஏதாவது கடை கண்ணி வெச்சு இப்படியே குடும்பத்தோட  இருந்திரலாம்னு பாக்கேன்"

"என்னலே இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே! இந்தா தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாச்சு, ஒரு மூணு வருஷம் பல்லை கடிச்சிக்கிட்டு இருந்துகிட்டேன்னு வையேன், அப்புறம் ஒரு கவலையும் இல்லை... கொஞ்சம் யோசிப்போ!"

"சரி பாக்கலாம்'என்றேன்.

வீட்டுக்குள்ளே நுழைஞ்ச உடனே ஓடி வந்து சித்தப்பான்னு காலை கட்டிக கொண்டார்கள் அண்ணனின் குழந்தைகள். அம்மாவும், அண்ணியும் "நல்ல இருக்கியாப்பா" என ஒரு சேர கேட்டார்கள்.காதலும் மகிழ்ச்சியும் பொங்கி வழிகின்ற பார்வை ஒன்றை பரிசாகத் தந்து என் கைகளை பிடித்தாள் என் இல்லாள். அவளின் புடவை தலைப்புக்கு பின்னே என் மகன் ஒளிந்து கொண்டு என்னை எட்டி பார்த்தான்...

"என்னடா அப்படி பார்க்கிறே! அப்பாடா..." என்றாள். அப்பாகிட்ட வாடா என்ற என்னை சின்ன சிரிப்பும், கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து விழித்தது குழந்தை. என்னா காசு பணம் சம்பாதிச்சு என்னடா புண்ணியம்! பெத்த புள்ளைக்கு நம்மளை அடையாளம் காட்ட வேண்டியதை நினைத்து மனசு வலித்தது. போன விடுமுறைக்கு வந்த போது உதித்தவன இவன்!!! திரும்ப ஒரு தடவ கூப்பிட்ட உடனே வந்தவனிடம் ஒரு சாக்கலேட் ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். பெட்டியினுள்ளே இருந்து சாக்கலேட் டப்பா ஒன்றை எடுத்து "பிள்ளைங்களா! எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க" என்றேன். "ஹே" என்ற ஆரவாரத்துடன் கை நிறைய அள்ளிக் கொண்டார்கள் குழந்தைகள்.

தையல் வகுப்பு முடிந்து உள்ளே வந்த தங்கை "ஐ! அண்ணா ! எப்ப வந்தே.... எப்படி இருக்கே" என்றாள்... நான் நல்லா இருக்கேம்மா... சரி சரி எல்லாரும் வந்து உங்களுக்கு என்னலாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க... எடுத்துக்குங்க!

ஒரு வழியாய் இந்த அமலிகளெல்லாம் ஓய்ந்து களைப்பு தீர குளித்து விட்டு நல்ல மணக்க மணக்க சாம்பார், அவியல், பொரியல், கீரை கூட்டு வைத்து சாப்பாடு ஒரு பிடி பிடித்தேன்." என்னங்க! நீங்க கறி ஆக்கலாம்னு பாத்தா வேணாம்னு சொல்லீட்டியளே" சலித்துக் கொண்டாள் என் மனைவி... "லூசு! அங்கே எப்போ பாத்தாலும் கறியா தின்னு தின்னு வெறுத்து போச்சு.. அதான் இப்படி சைவ சாப்பாடு கேட்டேன்"

சாயந்திரமா வெளியே கெளம்பும் போது "எப்போப்பா திருப்பி போகனும்... நீ இருக்கம் போதே தங்கச்சிக்கு நல்ல எடமா பாத்து உறுதி பண்ணிடனும்! அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் வெச்சா நீயும் போயி காசு அனுப்பலாம்ல" என்றாள் அம்மா.

"ஆமா! அதோட சேத்து அந்த பக்கத்துல குச்சிலையும் கெட்டிரலாம்" என்றாள் அண்ணி.

"சித்தப்பா! அடுத்த தடவ வரும் போது இன்னும் நெறைய சாக்கலேட் வாங்கிட்டு வாங்க" என்றார்கள் அண்ணனின் பிள்ளைகள்.

"அண்ணே! எனக்கு கூட இன்னும் ஒரு நாலைஞ்சு நல்ல சேலை எடுத்து அனுப்புன்னே! கல்யாணத்துக்கு அப்புறம் வெளியே போகையில கெட்டுரதுக்கு" என்றாள் தங்கை.

என்னடா இது! எல்லாரும் நம்ம திரும்ப போறதை பத்தி தான் பேசுறாங்க... நம்மளை யாருமே இருக்க சொல்லலியேன்னு மனசு மறுதலித்தது. குடும்ப சூழ்நிலையால் தான் வெளிநாட்டுக்கே போனேன். இன்னும் ஒரு தடவ போயிட்டு வந்தா குடும்பம் நல்லா நிமிர்ந்திடும்.... அதான் சொல்றாங்கன்னு தெரியுது..ஆனா இந்த பாழா போன மனசு போக மறுக்குதே....

ராத்திரி என் நெஞ்சில் படுத்துக் கொண்டு " என்னங்க! உங்க புள்ளைய பாத்தீங்களா!அப்படியே உங்க ஜாடை! உங்க நெனப்பு அதிகமா வரும் போதெல்லாம் இவன்தான் எனக்கு ஆறுதல்ங்க! " என்றவளை இறுக்கி அணைத்தேன். 

ச்சே! இங்கே ஒருத்தி இப்படி தவிக்கிறா நமக்காகனு ரொம்ப பெருமையா இருந்தது.... 

"முதல் தடவ நீங்க ஊருக்கு போகும் போது எனக்கு அப்படியே உயிரை யாரோ உருவி எடுத்த மாதிரி இருந்ததுங்க! ஏன்டா இப்படி ஒரு பொழப்பு,... பேசாம செத்துப் போயிடலாம்னு கூட யோசிச்சேன்... எதுவுமே பிடிக்கலை.... இப்போ நெனச்சா கூட வலிக்குதுங்க" என்றாள்.

"ஆனா இப்போ பழகி போச்சுங்க! ஆமா நான் கேக்கவே மறந்துட்டேன், எப்போ நீங்க போகணும்?"  

நட்புடன், 

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

29 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
    நினைவுகளே ஒரு சுகமான சுமை தானே.. சகோதரா..

    ReplyDelete
  2. வீட்டக்காரம்மா மட்டும் மாற்றிக் கேட்டார்கள் என்று முடித்திருக்கலாம். சாதாரணமா அப்படித்தான் இருக்கும்.
    வந்தவன் எவன் ஊரில் தங்குகிறான் என நிறைய எதார்த்தமானவர்களோ என்னவோ?

    ReplyDelete
  3. சிவா, நல்லா இருக்கு. நான் கிட்டத்தட்ட யோசிச்சு வெச்சிருந்த பிளாட். விஷசுழல் அப்படின்னு டைட்டில் வெச்சிருந்தேன். சவால் சிறுகதைப் போட்டியின் போது நான் உங்க பிளாட்டைத் திருடினதுக்கு இது பதிலா?!

    ReplyDelete
  4. ஹாய் சிவா சென்னையில் வசிக்கிறேன்னு சொல்றீங்க எப்படி இந்த உண்மையெல்லாம் தெரியும்????!!!!!



    ராத்திரி என் நெஞ்சில் படுத்துக் கொண்டு " என்னங்க! உங்க புள்ளைய பாத்தீங்களா!அப்படியே உங்க ஜாடை! உங்க நெனப்பு அதிகமா வரும் போதெல்லாம் இவன்தான் எனக்கு ஆறுதல்ங்க! " என்றவளை இறுக்கி அணைத்தேன்.

    "முதல் தடவ நீங்க ஊருக்கு போகும் போது எனக்கு அப்படியே உயிரை யாரோ உருவி எடுத்த மாதிரி இருந்ததுங்க! ஏன்டா இப்படி ஒரு பொழப்பு,... பேசாம செத்துப் போயிடலாம்னு கூட யோசிச்சேன்... எதுவுமே பிடிக்கலை.... இப்போ நெனச்சா கூட வலிக்குதுங்க" என்றாள்.


    ஒன்றும் முடியல மனது வலிக்குது..............

    ReplyDelete
  5. மனதை கனக்க வைக்கிறது.

    ReplyDelete
  6. நன்றி ம.தி.சுதா.

    நன்றி சுல்தான்.

    என்ன கோபி! "great people think alike"னு நீங்கதானே சொன்னீங்க! ஆனாலும் இந்த கதையை நீங்க நல்லா எழுதிருப்பீங்கன்னு உங்க தலைப்பே சொல்லுது..."விஷசுழல்" அருமை....

    நன்றி ஜெகன்.... எல்லாமே கேள்வி ஞானம்தான் கேப்டன்!

    நன்றி சித்ரா... இதிலே சில விஷயங்கள் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்ததுதான்...

    ReplyDelete
  7. சூப்பர் க்ளைமாக்ஸ். சிரிப்பு தாங்கல . எல்லார் வீட்டு கதையும் இதுதான்.

    ReplyDelete
  8. நன்றி கக்கு - மாணிக்கம்!

    ReplyDelete
  9. உறய வைக்கும் உண்மை...

    ReplyDelete
  10. சிவா இதுமாதிரி எழுத‌ வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து எல்லோரிட‌மும்.. நீங்க‌ விவ‌ரிச்ச‌ வித‌ம் அருமை.. அந்த‌ வ‌லி என‌க்கும் தெரியும்...பிர‌மாத‌மான‌ ப‌திவு..

    ReplyDelete
  11. நன்றி யோகேஷ்!

    கண்டிப்பா இருக்கும் அஹமது! நன்றி!

    ReplyDelete
  12. முடிவு பலர் அனுபவித்த,சொல்கிற நிஜம்தான்...

    சொல்லியிருக்கிற விதம் நல்லாருக்கு.

    ReplyDelete
  13. விவரிச்ச விதம் அருமை சிவா!
    ரொம்ப அழகா வந்திருக்கு...

    ReplyDelete
  14. நன்றி சுந்தரா!

    நன்றி பாலா!

    இந்த சிறுகதை எழுதும்போது சரியா வருமா நமக்குன்னு ரொம்ப யோசிச்சேன்! உங்கள் எல்லோருடைய ஆதரவுக்கும் நன்றி!!!

    ReplyDelete
  15. சுடுகிறது நிஜம் . வலிகளை அழகாய் எழுத்துக்களில் சொல்லி இருக்கும் விதம் அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  16. /////இந்த சிறுகதை எழுதும்போது சரியா வருமா நமக்குன்னு ரொம்ப யோசிச்சேன்! உங்கள் எல்லோருடைய ஆதரவுக்கும் நன்றி!!!
    /////////


    முடியாது என்று நினைத்துவிட்டால் சுவாசிப்பது விடுவது கூட ஒரு வேலையாகத் தெரியும் , தலை முடிக் கூட சுமையைக் தோன்றும் . நீங்கள்தான் சிறுகதையின் தலைவன் என்று எண்ணி கற்பனைகளை கசியவிடுங்கள் வெற்றி நிச்சயம் !

    ReplyDelete
  17. உங்கள் ஊக்கத்துக்கு நன்றி பனித்துளி சங்கர்!

    நன்றி ராம்ஜி_யாஹூ

    ReplyDelete
  18. //"ஆனா இப்போ பழகி போச்சுங்க! ஆமா நான் கேக்கவே மறந்துட்டேன், எப்போ நீங்க போகணும்?" // நச்சுன்னு முடியுது... அவ ஏன் அப்படி சொல்றான்னு கொஞ்சம் மேலே சொல்லியிருக்கலாம். நன்றாக வந்திருக்கு. அருமை. முழுக்க முழுக்க டயலாக். வசனகர்த்தா ரோலுக்கு ட்ரை பண்ணலாம். ;-) ;-)

    ReplyDelete
  19. நன்றி RVS!!! ஆனா வசனகர்த்தா எல்லாம் ஹி ஹி ஹி.... உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு... நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லைங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    ReplyDelete
  20. கதை ரொம்பவே நெகிழவைத்தது. நிதர்சன உண்மை. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  21. வலிகள் மாறவில்லை நண்பரே

    பாசத்திற்காக
    நம்மை
    விற்கிறோம்
    விலை
    அறியாமல்
    விலை மானிடர்களாய்
    விடை
    கிடைக்கவில்லை
    இன்றும்
    விதி சொல்லும்
    வாக்கியம்
    விரும்பியது
    கிடைக்காது
    நமக்கு..........

    ReplyDelete
  22. நன்றி ஸ்டார்ஜன் & தினேஷ் குமார்!

    ReplyDelete
  23. உங்க கதை ரொம்ப அருமை சிவா..அந்த நெல்லை வட்டாரமொழியோட அமைஞ்சது இன்னும் நல்லா இருக்கு...வெளிநாட்டில் இப்படி தான் சொந்த பந்தங்களை மிஸ் பண்ணிட்டு எத்தனை பேரு வாழறாங்க...நீங்க அவங்க நினைக்கிறதை கதையில் கொண்டுவந்துட்டிங்கனு நினைக்கிறேன்...இது மாதிரி நிறைய பதிவை கொடுங்க...வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  24. உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி ஆனந்தி!

    ReplyDelete
  25. அருமை சிவா!!

    நிஜத்தை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  26. ரொம்ப இயல்பா கதை எழுதியிருக்கீங்க.. :-))

    வாழ்த்துக்கள் சிவா!!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!