Monday, September 27, 2010

திருநெல்வேலி சீமையிலே -2! அகஸ்தியர் அருவி!!!

பாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவிக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கிளைப்பாதை மேலே போகும்... அந்த படிக்கட்டுல நாம ஏரி போனோம்னா நம்ம போயி சேருற இடம் கல்யாண தீர்த்தம். இந்த இரண்டு இடங்களிலும் நாங்க பண்ணாத அட்டகாசம் கிடையாது.

Friday, September 24, 2010

திருநெல்வேலி சீமையிலே -1! பாபநாசம்!!!

வேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும்! ஹ்ம்ம்.... இதை அயல் நாட்டுலே இருக்கிற நண்பர்கள் மட்டும் இல்லை... என்னை மாதிரி எப்பவாது விடுமுறைல மட்டும் ஊருக்கு போக சநதர்ப்பம் இருக்கிறவங்க கூட சொல்லுவாங்க...

Monday, September 20, 2010

துரோகி - ஒரு பார்வை!


 தமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.

Friday, September 17, 2010

சிக்கன் பக்கோடாவும்! சிக்குன்னு ஒரு பொண்ணும்!!"விநாயகனே வினை தீர்ப்பவனே"னு உச்சஸ்தாயில் தள்ளி இருக்கிற  கோயிலில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து கேசம் கலைந்த தலையுடன் முகத்தில் களைப்புடன் சில பெண்கள் நேத்து பாத்த சீரியல் பத்தி ரொம்ப தீவிராமக ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள். பழைய லுங்கியை மடித்து கட்டி, பீடி ஒன்றை பற்ற வைத்தான் முருகேசன். வாங்கும் போது குருடாக இருந்த அவன் முண்டா பனியனில் இப்போது ஆயிரம் கண்கள்!  நரை முடி தலைஎங்கும் பரவ ஆரம்பித்து விட்டது... வீட்டுலே பொண்டாட்டியை கொஞ்சும் போது " முடியெல்லாம் நரைச்சு போனாலும் உனக்கு ஆசை மட்டும் நரைக்கலைய்யானு" அவ வெட்கப் பட்டதை நெனச்சு மெதுவா சிரிச்சிகிட்டான்.

Thursday, September 16, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்!


ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சு... கடைசியா எந்த படத்துக்கு இப்படி சிரிச்சேன்னு நினைவில்லை! இந்த படம் வெளியாகும்போது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை உடனே பாக்கனும்னு... ஆனா பாசக்கார பய புள்ளைக எல்லாரும் ஒட்டு மொத்தமா நல்லா இருக்குன்னு சொல்லவும் எப்படியாவது பாக்கனும்னு நெனச்சி கடைசியா நேத்துதான் பார்த்தேன்.. படம் முடிஞ்சி வெளியே வந்த பின்னாடிதான் யோசிச்சேன் இந்த படத்தோட கதை என்னன்னு... சத்தியமா ஒன்னும் இல்லை... அதே சமயத்திலே அந்த ஒரு நெனப்பே தியேட்டரிலே படம் பாக்கும்போது வரலை... அது டைரக்டருக்கும், அந்த நகைச்சுவைக்கும் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும்...

Monday, September 13, 2010

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை!!!

தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாகி இன்னும் தியேட்டரிலும் தியேட்டரை விட்டும் ஓடிய படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை... குறு விமர்சனம் ஆகையால் படத்தின் எல்லா விசயத்தையும் பற்றி  எழுத போவதில்லை... பார்த்ததில் எழுத தூண்டியதை பற்றி மட்டும் இங்கே..... ;-) நான் குறிப்பிட்டு இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் ஒரு சாமானிய சினிமா ரசிகனான எனக்கு தோன்றியவை... அவ்வளவே...

Friday, September 10, 2010

இளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 !!!

ஐய்யா! எல்லாருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புறேன், நான் மேலே சொல்லி இருக்கிற கலாட்டாக்கள் சத்தியமா எந்த வன்முறையையும் குறிக்கவில்லை! நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான்! எதுக்காக இந்த விளக்கம் என்றால், நெல்லையிலே சில கபடி மேட்ச்சுகளால நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கே அந்த விளையாட்டையே தடை செய்ற அளவுக்கு போயிருக்கு...

Friday, September 3, 2010

இளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்!!!

"ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தான், அவன் ஒரு நாள் ...." அப்படின்னு கோர்வையா சொல்ற கதை இல்லை என்னோட சாரி எங்களோட இளம் பிராயம். இதிலே எங்களோட சொன்னது என்னோட நண்பர்களையும் சேத்துதான், ஏன்னா அவங்க இல்லன்னா இளமையும் இல்லை கலாட்டாவும் இல்லை... எப்போதுமே பிளாஷ்பேக்தான் செம ஹிட்டாவும் வெயிட்டாவும் இருக்கும், சினிமால கூட ! இந்த நிமிஷம் காலபைரவன் வந்து என்ன வேணும்னு கேட்டா, தயவு செஞ்சு கால சக்கரத்தை பின்னோக்கி சுத்தி அந்த டீன்-ஏஜ் பருவத்தை உடனே குடுத்துருன்னு கேப்பேன்... நான் மட்டும் இல்லை நம்ம எல்லோருமே தான் கேப்போம்!