Friday, October 15, 2010

திருநெல்வேலி சீமையிலே -3! காரையார் & பாணதீர்த்த அருவி !!!

போன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேலே மலையிலே போனா, உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு அணைக்கட்டு பாக்கலாம்...அந்த அணையோட பேரு காரையார் அணை!




அந்த அணையிலே இருந்து கீழே பாத்தீங்கன்னா... அட பாருங்க கீழே! முதல்லே இருக்கிற போட்டோ தண்ணி நெறஞ்சு இருக்கும்போது எடுத்தது.... ரெண்டாவது கொஞ்சம் தண்ணி கம்மியா இருக்கும் போது சுட்டது!




என்ன அப்படி மலைச்சு போயி நின்னுட்டீங்க... வாங்க இன்னும் நெறைய இருக்கு...

இந்த அணையை கட்டுனது அப்போ நம்மளை ஆண்ட ஆங்கிலேயர்கள்! அந்த மட்டில திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மூணு போகம் வெள்ளாமை பண்றதுக்கு உதவுற முக்கியமான அணைகள்ள இதுவும் ஒண்ணு! அணையோட கரையிலே நல்ல சூடா ஆத்து மீன் வறுத்து வெச்சிருப்பாங்க... வேணும்னா வாங்கி ஒரு கடி கடிச்சிக்கலாம்...

நம்ம வருவோம்னு அங்கே ஏகப்பட்ட விசைப்படகு தயாரா இருக்கு... வாங்க போவோம்... எங்கேனு கேக்கிறீங்களா? வாங்க போயி பாக்கலாம்! நம்ம மணியோட ரோஜா படத்திலே நல்ல இளசா இருக்கிற மதுபாலா "சின்ன சின்ன ஆசை" பாட்டுல ஒரு அருவில ஆட்டம் போடுவாங்களே அங்கே தான் போக போறோம்! அந்த படம் மட்டும் இல்லை இப்போ சமீபத்தில வந்த 'ஆனந்த தாண்டவம்" படத்திலே கூட நெறைய காட்சிகள் காரையார சுத்தி தான் எடுத்துருக்காங்க!

ஒரு இருபது நிமிஷம் அணையில நாம இந்த விசைப்படகிலேதான் போகணும்.... இருவதோ முப்பது ரூவாயோதான்... ரொம்ப கம்மியா இருக்கில்ல.... அந்த பயணம் ஒரு நிஜமான சுகானுபவம்... அனுபவிச்சுப் பாத்தாதான் தெரியும்... அந்த மூலிகை காத்தை சுவாசிச்சிட்டு, படகு போகும்போது தெறிக்குற அந்த தண்ணியோட சாரல்ல அப்படியே நனைஞ்சிக்கிட்டு முடிஞ்சா " ஆத்துக்குள்ளே ஏலேலோ"னு ஏதாவது ஒரு பாட்டையும் எடுத்துவிட்டோம்னு வைங்களேன்... அட போங்கப்பா... வேற என்ன வேணும்!!!

அப்படியே ஜாலியா அந்த படகுப் பயணத்தை என்ஜாய் பண்ணும்போது மெல்ல மெல்ல அணைக்கட்டு மறைஞ்சு மெல்ல திரும்பும்... அப்படியே நீங்களும் மேலே பாத்தீங்கன்னா... ஒரு பெரிய மலை உச்சில இருந்து பெரிய அண்டாவில இருந்து பாலை அப்படியே கொட்டுன மாதிரி அருவி விழும்... மேலே கொட்டுற அருவிய கீழே பாருங்க!


என்னடா இது! ஒரே பாறையா இருக்கு எப்படி ஏறி போயி குளிக்கிரதுன்னு மைல்டா ஒரு டவுட்டு வருதுல்ல... இது போட்டுல இருந்து பாக்குற வியூதான்... இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் சுத்தி நம்மளை இறக்கி விடுவாங்க... அங்கே ஒருந்து ஒரு பத்து நிமிஷம் படியிலே ஏறனும்.... ஏறுனா முதல்லே ஒரு சின்ன பிள்ளையார் உங்களுக்கு அருள் பாலிக்க உக்காந்திருப்பார்.... அவரை கண்டுக்குங்க முதல்லே....

அங்கே இருந்து ஒரு நாலு ஸ்டெப் எடுத்து வெச்சீங்கன்னா உங்க முன்னாடி கொட்டுரதுதான் பானதீர்த்த அருவி... படங்கள் கீழே!!!


படத்தை கிளிக் பண்ணி பாத்தீங்கன்னா அந்த ஓரத்திலே மட்டும்தான் ஆளுங்க குளிக்க முடியும்! அருவிக்கு முன்னாடி இருக்கிற அந்த தடாகம் ரொம்ப ஆழமான இருக்கும், அதிலே சுழலும் இருக்கும்... ஒவ்வொரு வருஷமும் சில உயிர்களை காவு வாங்கிவிடும்.... பயப்பட வேண்டாம் .... ஒழுங்கா அருவிலே குழிச்சிட்டு கரைக்கு வந்தா ஒரு பயமும் இல்லை.... மப்புலே இல்லை சும்மா ஒரு கெத்துலே அங்கே நீச்சல் அடிக்க ட்ரை பண்ணத்தான் ரிஸ்க்....

மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு....








 அடுத்த பதிவிலே மாஞ்சோலை பத்தி எழுதலாம்னு இருக்கின்றேன்...  பாக்கலாம்...

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

28 comments:

  1. படங்களும் செய்திகளும் மிக அருமை

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. படங்களும் நீங்கள் சொல்லி இருக்கும் விதமும் அழகு. நன்றி

    ReplyDelete
  3. முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டீங்களே சிவா?
    மஞ்சள் காமாலைக்கு மருந்து தர்ற இடம் காரையார் தானே?
    ஆரம்ப நிலைக்கு சரி, அதிகமானால் வைத்தியரை பார்ப்பது தான் சரி

    ReplyDelete
  4. நன்றி வல்லிசிம்ஹன்!

    @ நாய்க்குட்டி மனசு - நெறைய விஷயங்கள் சொல்லல!... ஆனாலும் இதை சொல்லி இருந்திருக்கலாம்....

    ReplyDelete
  5. அந்த படகுப் பயணம், ஒரு திகில் அனுபவம் தான்!லைஃப்- ஜாக்கெட் கண்டிப்பாக வழங்கப் பட வேண்டும்! வருடம் முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில்!
    அருவித் தடாகம், மிக அபாயம் மிக்கது! விகடனில் ஒரு உண்மை கதை கூட வந்ததே!
    படங்கள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஊர் நினைப்பு அதிகமாகி கொண்டே போகிறதே.....

    ReplyDelete
  7. சூப்பர் சிவா. போட்டோ எல்லாம் நீங்களே புடிச்சதா. நல்லா இருக்கு. ஒங்க வர்ணனையும் நல்லா இருக்கு. இதே மாதிரி நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  8. படங்கள் அருமை சிவா!
    நல்லா எழுதியிருக்க நண்பா!
    வெய்டிங் :)

    ReplyDelete
  9. பகிர்வுக்கு மகிழ்ச்சி.பானதீர்த்தம் அருவி போகும் பொழுது போட் பாதியில் நின்று எங்களை இன்னொரு போட் வந்து மீட்டு சென்றது,இன்னமும் அந்த திரில்லான அனுபவம் மனசில இருக்கு.

    ReplyDelete
  10. @ ரம்மி : இப்போ லைப் ஜாக்கட் அங்கே எல்லா போட்டுலயும் இருக்கு!இங்கே மட்டும் இல்லை... அகத்தியர் அருவிளையும் வருஷம் பூரா தண்ணி விழும்!!

    @ சித்ரா : யாரங்கே! உடனே பிளைட் டிக்கட் புக் பண்ணுங்க!!!

    @ கோபி: இதுல சரியா சொல்லனும்னா ரெண்டு போட்டோ மட்டும்தான் என்னோடது... சிலது தெரிஞ்ச நண்பர்களோடது... சிலது தெரியாத நண்பர்களோடது!

    @ Eeva : நன்றி!

    @பாலா: நன்றி பாலா... எனக்கு கூட நெறைய எழுதனும்னுதான் ஆசை... ஆனா என்ன நான் கொஞ்சம் இல்லை அதிகமாவே சோம்பேறி...

    @நாடோடிப் பையன் : வருகைக்கு நன்றி!

    @asiya omar: நன்றி! இப்போ நெனச்சு பாக்கும்போது அந்த அனுபவம் த்ரில்லா இருக்கும்... ஆனா அந்த சூழ்நிலையிலே :-)அதில்லாம இப்போ உள்ள போட் எல்லாமே நல்ல பராமரிப்பு பண்ணி வெச்சிருக்காங்கனு கேள்வி....

    ReplyDelete
  11. நல்ல படங்கள்! அருமை!

    ReplyDelete
  12. College padikkum pothu IPT ponom . Nan padagula eluthi iruntha panar theertha aruvi enbathai marana theertha aruvi enru padichen friends kolaverila parthanga ennai. Old days . . .photos super . Innonru aruvi valiyaga ponal kerala 20km thanam .

    ReplyDelete
  13. அருமையான இடங்கள்.படங்களும்அழகு.

    ReplyDelete
  14. படங்கள் அற்புதம்.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  15. நான் கடந்த மூன்று மாதத்திற்கு[[பஹ்ரைன் வரு முன்]] முன் காரையார் போயிருந்தேன் கேமராவுடன், கேமரா கொண்டு போக தனியாக காசு கொடுத்து டிக்கெட்டும் ஏன் மைத்துனன் ஆல்பர்ட் வாங்கியிருந்தான், ஆனால் தெரியாமல் நான் கேமராவை கரையில் காரில் வைத்து விட்டு போட்டில் ஏறின பின்தான் ஓர்மை வந்தது.....ச்சே படம் எடுக்க முடியலையேன்னு, ஆனா சிவா, உங்க பதிவில் உள்ள படங்களை பார்த்ததும் நானே அந்த படங்களை எடுத்து போல சந்தோஷப் பட்டேன். வாழ்த்துக்கள் சிவா........

    ReplyDelete
  16. @ தேவன் மாயம் - நன்றி!

    @ மதார் - வருகைக்கு நன்றி... சரியா சொன்னா காட்டு வழியா போனா திருவனந்தபுரம் 75 கிமீ தான்... ரோடு கூட இருந்ததா கேள்வி... ஆனா அரிசி மற்றும் நெறைய கடத்தல் நடந்ததால அதை மூடிட்டாங்களாம்.

    @ மாதேவி & அம்பிகா - நன்றி!

    @ நாஞ்சில் மனோ - முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  17. கண் கொள்ளா காட்சிங்க..

    ReplyDelete
  18. @ தாராபுரத்தான் : மிக்க நன்றி!

    ReplyDelete
  19. அன்புள்ள சிவா நண்பருக்கு.....

    வித்யாசன் எழுதி கொள்வது.. உங்களது பாபநாச தொகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
    எனக்கு இது பற்றி முழுமையான தகவல் உங்களிடமிருந்தே கிடைத்தது. பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.


    நானும் உங்களது ஊருக்கு அருகமையில் பிறந்தவன்தான். எனது ஊVர் கடையம். வசிப்பது மதுரை. பணி பத்திரிக்கையில். ஒரு கட்டுரைக்காக தேடிபோது தான் உங்களது பதிவு கிடைத்தது. உங்கள் ஊVர் பெண்னை தான் திருமணம் செய்ய போகிறேன். ஆகஸ்டில் நடைபெறும். உங்களது செல் நம்பர் அனுப்பினால் நன்றாக இருக்கும். நன்றி தெரிவிக்க.



    எனது செல் எண் 8012836906. நன்றிகள் பல. பத்திரிக்கையில் 4.07.11 அன்று பாபநாச கட்டுரை வெளியாகும் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
  20. Now we don't have access to this place. How to go about?

    ReplyDelete
  21. சகோதரரே அருமயாக பதிவு செய்துள்ளீர்கள் பாணதீர்த்தம் சென்று வந்த உணர்வு

    ReplyDelete
  22. சகோதரரே அருமயாக பதிவு செய்துள்ளீர்கள் பாணதீர்த்தம் சென்று வந்த உணர்வு

    ReplyDelete
  23. எந்தெந்த மாதங்களில் செல்லலாம் என சொல்லியிருக்கலாம்...

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!