மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் முதல் பதிவின் சுட்டி இது.. முதல் பாகம் வாசிக்காதவர்கள் அதை கண்டு விட்டு தொடரவும்....
இயற்கையை ரசித்துக் கொண்டே நாங்கள் பயணித்த தவேரா மெதுவா முன்னேறியது... குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே இடையிடையே இயற்கையின் அவசரத்திற்க்கும் சில இடங்களின் அழகை ரசிக்கவும் நிறுத்தி நிறுத்தி சென்றோம்.
சிறிது தாகம் எடுத்தவுடன்தான் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரவில்லை என்பது உறைத்தது, உடன் வந்த நண்பர்(அவரின் மனைவி மாஞ்சோலையை சேர்ந்தவர்) மெதுவாக சிரித்துகொண்டே பார்த்துக் கொள்ளலாம் என்றார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வண்டி ஒரு ஓரமாக நின்றது; அந்த பாட்டிலை எடுங்க தண்ணி பிடிச்சிக்கலாம் என்றவரை நான் விநோதமாக பார்த்தேன்... சுத்தி எங்கு பார்த்தாலும் நீர் நிலை எதுவும் இல்லை! ஐயோ!இவர் எந்த தண்ணிய சொல்றாருன்னு தெரியலையேன்னு நெனச்சேன். ஒரு சின்ன புதர் போல இருந்த செடிகளுக்கு நடுவில் கொஞ்சம் குனிந்து சென்றார்... இப்போது என் காதுகளுக்கு "சல சல"வென ஒரு சிற்றோடையின் சங்கீதம் கேட்டது... அந்த ஓடை ஒரு சிறிய பாறையின் மேலிருந்து ஒரு குட்டி அருவி போல் கொட்டியது... ஒரு கை நீரை எடுத்து குடித்து பார்த்தால் பனிக்கட்டி உருகியது போல் சில்லென்று அதே சமயம் மிகவும் சுத்தமாக, சுவையாக இருந்தது... ஆச்சரியத்தில் "எப்படிண்ணே" என்றேன்... அதற்கும் ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்....
தாகத்திற்கும், மிக்சிங்கிர்க்கும் அந்த தண்ணீர் பயன்பட்டது...அங்கிருந்து சில நிமிடங்களில் மாஞ்சோலைக்குள் நுழைந்தது தவேரா. இரு பக்கங்களும் பச்சை பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள், மரங்கள், அந்த மூலிகை வாசம் நிறைந்த காற்று எல்லாம் சேர்ந்து எங்கள் கண்களுக்கும் மனதிருக்கும் பேருவகை அளித்தது. சொற்ப எண்ணிக்கையில் வீடுகளும் சில சிறிய கடைகளும் கண்ணில் தென்பட்டன. அங்குள்ள கடை ஒன்றில் அவர்களே தயாரிக்கும் ரஸ்க்(டீ குடிக்கும் போது ஒரு மிகச் சரியான ஜோடி) பாக்கட் வாங்கி கொண்டோம். ஹ்ம்ம்ம்.... ஆவட்டும்! இன்னும் மேல குதிரை வெட்டி வரைக்கும் போகணும்பா... போலாம்னு குரல் கொடுத்தார் எங்கள் வழி காட்டி நண்பர்...
மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி,ஊத்து & குதிரைவெட்டி... என்ன பாக்குறீங்க! இதெல்லாம் போகின்ற வழியில் இருக்கும் ஊர்களின் பெயர்....! மாஞ்சோலையிலிருந்து சற்று தூரம் சென்றவுடன் வலது பக்கம் பார்த்த எங்கள் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன! சிலருக்கு கண்கள் நெற்றியை தொட்டு கீழிறங்கியது. பச்சை ஆடை போர்த்திய ஒரு மைதானம், ஒரு கோல்ப் மைதானம் போல... நண்பர் சொன்னார், இதுல எஸ்டேட் முதலாளிங்க, மேனேஜருங்க எல்லாம் கோல்ப் ஆடுவாங்க, ஆனா இதை யாரும் உருவாக்கலை... இது இயற்கையா உருவான ஒரு கோல்ப் மைதானம்னு சொன்னாரு.. எனக்கு அப்படியே யேசுதாஸின் குரல் ஒலித்தது!
"பூமி பெண்ணும் இங்கு போட்டு வைத்து கொண்டு
பச்சை ஆடை கட்டிப் பார்த்தாள்"
படங்கள் கீழே !
கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறி விட்டு மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது.... என்னடா இது! குரங்கைத் தவிர ஒரு மிருகத்தையும் பாக்க முடியலையேன்னு குறைபட்ட எங்களுக்கு தேயிலை தோட்டத்துக்கு நடுவே நின்ற "மிலா" அகப்பட்டது... காமெராவை எடுப்பதற்குள் ஓட்டம் எடுத்து கொஞ்சம் உள்ளே தள்ளி சென்று திரும்பிப் பார்த்தது... முடிந்தவரை ஜூம் செய்து எடுத்தேன்...
படங்களை கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்.அடுத்த பதிவில் முடித்து விடலாம்!
நட்புடன்,
உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!
மிக அழகான படங்கள்! அனுபவம் அருமை!
ReplyDeleteஅழகான பக்கங்கள்... நல்ல பகிர்வு...
ReplyDeleteநன்றி எஸ்.கே & வெறும்பய!
ReplyDeleteஎன்ன சொல்லத் தோணுதுன்னா, 'நீ கலக்கு மச்சி'
ReplyDeleteஅழகான இயற்கையின் பதிவு புகைப்படங்களுடன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
நல்ல எழுத்து நடை சிவா..
ReplyDeleteபடங்கள் அருமை..
நன்றி கோபி, தினேஷ்குமார் & பாலா! உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!
ReplyDeleteungal varugaikkum karuthukkum nandri nabareaaaaaa
ReplyDeleteithu enathu muthal varugai nichayamaai ithu kadichiyaay irrukaathu, enn kadachi varaiyilum varuveaan
புகைப்படங்கள் அருமையுளும் அருமை ...வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வினு & FARHAN!
ReplyDeleteபதிவும் படங்களும் மிக மிக அருமை...
ReplyDeleteநன்றி நண்பா !!!
ReplyDeleteஉங்களோட எழுத்து நடை படிக்கற எங்களையும் உங்களோட பயணிக்க வைக்குது சிவா.. நல்லா எழுதியிருக்கீங்க.. படங்கள் அருமை..
ReplyDeleteமிக்க நன்றி பாபு!
ReplyDelete