Thursday, October 7, 2010

பாலுணர்வும்! வாளுணர்வும்!! - இருவர்!!!

காலையில் வீட்டுல சும்மா பாட்டு கேட்டுகிட்டு இருக்கும் போது இருவர் பாடல்கள் ஒலித்தது! அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப்படியே புல்லரித்தது! இததனைக்கும் ரெண்டும் வேற வேற உணர்வுகள்; வேற வேற கருத்துக்கள்... ஆனா அதை கேக்கும்போது வர்ற உணர்வு என்னவோ ஒரு சிலிர்ப்பு...

அப்படியே அந்த இடத்தில் நம்மளை உருவகப் படுத்தி பாக்க வெக்கும்... எனக்கு சத்தியமா தோணிச்சு! அந்த ரெண்டு கவிதைகளையும் இங்கே கொடுத்திருக்கேன்... ஒண்ணு காதலோடு கலந்த காமம் இன்னொன்னும் காதல்தான் ஆனா அது மொழி, மண் மேல உள்ள காதல்.... முதல்லே படிச்சு பாருங்க அப்போதான் அந்த உணர்விலே திளைக்க முடியும்.... வீடியோவும் பாக்க ஆசைபடுறவங்க கீழே வரவும்! (ஒரு வீடியோ தான் இணைக்க முடிஞ்சது! இன்னொன்னுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்)


இந்த கவிதைகளைப் படைத்த வைரமுத்துவிற்கும், அந்த இரு மாறுபட்ட உணர்வுகளையும் துளியும் சிதைக்காமல் மிக அனாசயமாக மேலும் தன் குரலால் மெருகூட்டிய அரவிந்தசாமிக்கும் என் வந்தனங்கள்! 

கவிதை - 1

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!
பார்வையிலே சில நிமிடம்; பயத்தோடு சில நிமிடம்;
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களில்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

எது நியாயம், எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா, அது பகலா அது பற்றி அறியவில்லை!
யார் தொடங்க, யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை!
அச்சம் கலைந்தேன்; ஆசையினை நீ அணிந்தாய்!
ஆடை கலைந்தேன்; வெட்கத்தை நீ அணிந்தாய்!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடையிசிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!

கவிதை - 2

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு 
இனம் ஒன்றாக மொழி வென்றாக 
புது வேலை எடுப்போம் விடிவுக்கு!

நம் வெற்றிப் பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு!

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு 
இனம் ஒன்றாக மொழி வென்றாக 
புது வேலை எடுப்போம் விடிவுக்கு!
நம் வெற்றிப் பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணுக்கு!

பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்
பிறந்த பிள்ளை இறந்து பிறந்தால் 
வாளால் கீறி புதைப்போம்!

யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித் தாமரை பறிப்போம்!

எங்கள் மண்ணைத் தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்!

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு 
இனம் ஒன்றாக மொழி வென்றாக 
புது வேலை எடுப்போம் விடிவுக்கு!

உன்னோடு நான் :


உடல் மண்ணுக்கு:


நட்புடன், 
உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

18 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அழகிய கவிதைகள்!

    ReplyDelete
  3. வைரமுத்து அவர்களைப் பற்றி என்ன சொல்ல?.. ஜீனியஸ்!..
    மீண்டும் நினைக்க வைத்ததற்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு சிவா!

    ReplyDelete
  4. //குரலால் மெருகூட்டிய அரவிந்தசாமிக்கும் என் வந்தனங்கள்!//
    சிவா?!*&^$?@#$

    ReplyDelete
  5. கலக்கல் பாஸ்.

    நானும் ஒரு சினிமா பாடல் பத்தி எழுதி இருக்கேன். பழைய பாடல். முடிஞ்சா படிச்சுப் பாருங்க.

    http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_6908.html

    ReplyDelete
  6. நன்றி சித்ரா!

    @பாலா: எனக்கு அரவிந்தசாமி அந்த கவிதைகளை பாடியிருப்பது மிகவும் பிடித்திருந்தது!

    ReplyDelete
  7. நன்றி கோபி! கண்டிப்பா படிக்கலாம்!

    ReplyDelete
  8. ரொம்ப க்ளாஸ் சதீஷ்..நல்ல ரசனை உங்களுக்கு..இருவர் படம் பார்த்திருக்கேன்..நறுமுகையே பாட்டு மட்டுமே விரும்பி கேட்ருக்கேன்..இந்த நல்ல வரிகளை நல்லா கவனிச்சதில்லை..இப்ப தான் வாசிச்சு அசந்துட்டேன்...

    ReplyDelete
  9. ஐயோ..சிவா..உங்க பேரை தப்பா டைப் பண்ணிட்டேன்..

    ReplyDelete
  10. அருமையான கவிதை வரிகள் சிவா..

    ReplyDelete
  11. நான் ரசித்து சிலாகித்த வரிகள் பாபு!

    மன்னிக்க முடியாத குற்றம் ஆனந்தி! நீங்கள் தினமும் 10 முறை என் வலைப்பூவிற்கு வரவேண்டும்! இதுதான் தண்டனை!

    ReplyDelete
  12. ரொம்ப ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. ரொம்பவும் வித்தியாசமான ரசனை உங்களுக்கு.. எனக்கும் கூட பிடித்தவை இவை.. நல்ல பதிவு சிவா!

    ReplyDelete
  14. நன்றி மோகன்ஜி & ம.தி.சுதா

    ReplyDelete
  15. MEEEEE THE FIRST....

    SORRY KONJAM LATE AITU....

    NALLA ERUKKUNA..

    ReplyDelete
  16. அருமையான் கவிதை வரிகள் சிவா..என்னோட லேப்டாப்ல இதை வெச்சிருக்கேன்..அடிக்கடி கேப்பேன்..கரெக்டா நீங்களும் அதை ரசிச்சு எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  17. நிச்சயமாக ரமேஷ்! நான் சிலாகித்த கவிதைகள்!!!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!