கமலஹாசனோட பிறந்த நாளில் SPB ஒரு இசைக்குழுவுடன் இணைந்து "கமல்" பாடல்களை மட்டும் பாடி ஒரு கான்சர்ட் நடந்தது. அப்பவே ராஜாவின் இசையில் இவர்கள் இணைந்த பாடல்களை ஒரு தொகுப்பா போடணும்னு நெனச்சேன்.நடுவில கொஞ்சம் பிசியானதால் அது அப்படியே விட்டு போச்சு. ஆனா சமீபத்தில கொடைக்கானல் போகும் போது, கொடை ரோட்டுல இருந்து ஹோட்டல் போற வரைக்கும் அப்படியே நான் உருகி போய்ட்டேன்....
Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts
Saturday, December 4, 2010
Thursday, October 7, 2010
பாலுணர்வும்! வாளுணர்வும்!! - இருவர்!!!
காலையில் வீட்டுல சும்மா பாட்டு கேட்டுகிட்டு இருக்கும் போது இருவர் பாடல்கள் ஒலித்தது! அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப்படியே புல்லரித்தது! இததனைக்கும் ரெண்டும் வேற வேற உணர்வுகள்; வேற வேற கருத்துக்கள்... ஆனா அதை கேக்கும்போது வர்ற உணர்வு என்னவோ ஒரு சிலிர்ப்பு...
Saturday, October 2, 2010
இளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை!!!
சின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற "கண்ணன் ஒரு கைக்குழந்தை" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற "சினி சிட்டி" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ்! அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக!னு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது!)
Subscribe to:
Posts (Atom)