Monday, September 27, 2010

திருநெல்வேலி சீமையிலே -2! அகஸ்தியர் அருவி!!!

பாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவிக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கிளைப்பாதை மேலே போகும்... அந்த படிக்கட்டுல நாம ஏரி போனோம்னா நம்ம போயி சேருற இடம் கல்யாண தீர்த்தம். இந்த இரண்டு இடங்களிலும் நாங்க பண்ணாத அட்டகாசம் கிடையாது.

முதல்லே கல்யாண தீர்த்தம்.... இதுக்கு ஏன் இந்த பெயர் வந்ததுன்னா நாம கால சக்கரத்தை ரொம்ப பின்னாடி சுழற்றி புராண காலத்துக்கே போகணும். நம்ம பரமசிவனுக்கும் பார்வதிக்கும் கைலாயத்துலே கல்யாணம் பண்ணனும் முடிவாயிச்சு. கல்யாணம் நடக்குறதே கடவுள் புண்ணியம்னு நாம நெனக்கும் போது அந்த கடவுளுக்கே கல்யாணம்னா கண்டிப்பா போய்த்தானே ஆகணும்... அதனால எல்லா கடவுள்களும்(கடவுள்ன்னா ஒருத்தர் தான அதென்ன எல்லா கடவுளும்!), தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கைலாயம் சென்றார்கள்.எல்லா சக்தி நிறைஞ்சவங்களும் அங்கே இருந்ததால வடக்கு உயர்ந்தது, தெற்கு தாழ்ந்தது(அய்யா ! இது சத்தியமா அரசியல் இல்லை ;-) )சிவனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை, எல்லாரும் கல்யாணத்தை பார்க்க வந்திருக்காங்க ஆனா அதுக்காக இப்படி தெற்குலே உள்ளவங்களை கஷ்ட படுத்த முடியாது. அப்போ அகஸ்தியர் ஞாபகம் வந்தது, அவரை கூப்பிட்டு நீங்க தென் கோடில எங்கேயாவது போயி இருங்கன்னு சொன்னாரு. அகத்தியருக்கு வருத்தம்; கடவுள் சொல்லை தட்ட முடியாது அதே சமயம் கல்யாணத்தையும் பாக்கணும். சிவபெருமான் சொன்னாரு "நீங்க கவலை படாதீங்க, எங்க கல்யாணத்தை நீங்க கண்டிப்பா பாக்கலாம்". அகத்தியருக்கு மைல்டா ஒரு டவுட், எங்கே நமக்கு ரெக்கார்ட் பண்ணி காமிச்சிருவான்களோனு! சரி... வேற வழி இல்லை அப்படின்னு அவரு வந்து சேர்ந்த இடம்தான் இந்த கல்யாண தீர்த்தம்! அங்கே உள்ள சிவலிங்கம் முன்னாடி உக்காந்து சிவனை நெனச்சு தவம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு... அகத்தியரு தெக்கே வந்தவுடனே பூமி சமமா ஆயிடுச்சு (தம்மாதூண்டு ஆளு அவரு! இதைத்தான் மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்றாங்க போல!). கரக்டா கல்யாணம் நடக்கும் போது அந்த லிங்கத்திலே அப்படியே கல்யாண காட்சி தெரிஞ்சிது அகத்தியருக்கு! (அப்படியே லைவா பார்த்தவருக்கு ஒரே ஒரு குறைதான் இருந்திருக்கும்... ஒரு போர்ட்டபிள் டிவி சைசுக்கு தான் கல்யாணத்தை பார்த்திருப்பார்). அதனாலதான் அந்த இடத்துக்கு கல்யாண தீர்த்தம்னு பேரு( அப்பா! சரியான பேர்க்காரணம் சொல்லியாச்சு!)

கொஞ்சம் கஷ்டப்பட்டு படி ஏறி வந்தா அந்த கஷ்டம் எல்லாம் கண்டிப்பா நமக்கு தெரியாது! அப்படி ஒரு இடம், நல்ல அமைதியா, அழகா ஒரு பெரிய தடாகம்.... அந்த தடாகத்தோட கடைசியில் ஒரு சின்ன அருவி விழும், ஆனா அங்கே போயி குளிக்க முடியாது அது ஒரு வருத்தம்தான்! அந்த இடத்திலே "யாரும் குளிக்க கூடாது"னு ஒரு அறிவிப்பு இருக்கும் (நாங்க அதெல்லாம் ஒரு பொருட்டா எடுத்ததே கிடையாது.).. செம ஆழமா இருக்கும் அங்கே...நீச்சல் தெரியாதவங்க யாரும் குளிக்க முடியாது. அங்கே இருக்கிற பாறைகள் மேல ரொம்ப உயரத்திலே நெறைய பெரிய தேனடைகள் இருக்கு! அந்த சூழலுக்கு நம்ம மனசு அப்படியே அடிமையாயிரும்... ஒரு  பேரமைதி கிடைக்கும்! அங்கே ஒரு சின்ன சிவ லிங்கம் வெச்சு கோயில் இருக்கும்...முதல்லே இருந்த அந்த கோயில் 1992 ல வந்த வெள்ளத்தில் தரைமட்டம் ஆச்சு.. அப்புறமா அதை புதுபிச்சாங்க!

கல்யாண தீர்த்தத்தோட சில படங்கள் உங்கள் பார்வைக்கு!
இந்த படம் வெள்ளம் அதிகமா வந்து கோயில் தரைமட்டமான சமயத்தில் எடுத்தது!

ஓகே! இப்போ அப்படியே மெதுவா கீழே இறங்கி வந்தா நம்ம அகஸ்தியர் அருவி! வருஷம் 365 நாளும், லீப் இயர்ல 366 நாளும் தண்ணி கொட்டிக்கிட்டே இருக்கும்... முன்னைலாம் இங்கே ரொம்ப கூட்டம் இருக்காது ஆனா இப்போலாம் வார இறுதில உள்ளே போக முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கு. ரொம்ப பெரிய உயரம் இல்லாம, ஒரு மீடியம் உயரத்திலே இருந்து விழும் அருவி இது... நெறைய திரைப்படங்களிலே இந்தஎ அருவி இடம் பிடிச்சிருக்கு. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!
இந்த கடைசி படம், நீர் வரத்து அதிகமாகி வெள்ளம் வந்த சமயத்தில் எடுத்த படம்! இதோட நான் ஜூட் விட்டுக்கிறேன். அடுத்த பதிவுலே நாம காரையார், சேர்வலார் அணைகளை பற்றியும், பான தீர்த்த அருவியை பற்றியும் பார்க்கலாம்!

நட்புடன், 

உங்கள் நண்பன் சிவா.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

32 comments:

 1. சூப்பர்..!!!!ரொம்ப அருமையான கட்டுரை..அழகான சுவையான எழுத்து நடை..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அடுத்த பதிவில் இன்னும் நிறைய தகவல்கள் சேகரித்து உன்னும் விரிவாக எழுதுங்கள் படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
 3. நன்றி சிவராம்
  சில வருஷங்களுக்கு முன் இந்த அருவிக்கு நண்பர்களோட வந்ததுண்டு , அருமையா இருக்கும் மேலே பான தீர்த்தம் படகுல போறது நல்ல அனுபவம் , வார நாட்கள்ல போனதால சுத்தமா கூடமே இல்லாம நல்ல குளியல் .அருமையான இடம் , எல்லாரும் பார்க்க வேண்டிய இடம்

  ReplyDelete
 4. @ ஆர்.கே.சதீஷ்குமார் - வருகைக்கு நன்றி! கண்டிப்பா முயற்சி பண்றேன்!

  @ dr suneel krishnan - கண்டிபாக எல்லாரும் பார்க்க வேண்டிய இடம்! வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 5. ராம் அண்ணா இப்போவே
  அருவிக்கு போகணும் போல இருக்கு.
  அழகா இருக்கு எல்லா புகைப்படங்களும்
  உங்க எழுதுகோர்வையும் நல்ல இருக்கு.

  அடுத்த பதிவு eppothu ...

  ReplyDelete
 6. பதிவு அருவியில் குளித்தாற்போல் நல்லா இருந்தது.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 7. சூப்பர் சிவா!
  படங்கள் அருமை! அருவிய சுத்திக்கிட்டே இருக்குது மனது!
  வெய்டிங் :)

  ReplyDelete
 8. நல்ல பதிவு சிவராம்குமார்..

  அருமையான இடத்துல வாழ்ந்துட்டிருக்கீங்க.. நண்பர்கள் குற்றாலம் டூர் வரும்போதெல்லாம் பாபநாசமும் வருவது வழக்கம்..

  புகைப்படங்களும் அருமை.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. அருமையான படங்கள் மூலம் அழகான ஊரை காட்டியுள்ளீர்கள்.. அதெல்லாம் சரி யாருக்க உங்க ஆக்கம் பிடிக்கல தமிழ் மணத்தில் கவிட்டுவிட்டிருக்கிறானுகள்...

  ReplyDelete
 10. good pics..and good sense of humour..

  ReplyDelete
 11. அடுத்த வாட்டி குத்தாலம் போனா பாபநாசம் போய்ட வேண்டியதுதான்.

  ReplyDelete
 12. @சிவா: நன்றி! கூடிய சீக்கிரமே அடுத்த பதிவு!

  @ஆர்.வி.எஸ்: வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  @ பாலா: நன்றி! கூடிய சீக்கிரம்!

  @ பாபு: அருமையான இடத்தில் வாழ்ந்தேன்.... இப்போது இல்லை :-(

  @ ம.தி.சுதா: யாருன்னு தெரியல! ஆவ்வ்வ்வ்வ்வ்!

  @ சேகர் : முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  @ கோபி: கண்டிப்பா போயிட்டு வாங்க கோபி!

  ReplyDelete
 13. உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு இந்த குழந்தைய பாத்துக்குங்க. ...

  enga veetu pillai evlo samathalam erukkathu..example mee....

  kondippa ungalai pathuphom..

  valga valamudan

  ReplyDelete
 14. கலக்கல் பதிவு...

  ReplyDelete
 15. இவ்வளவு அருமையான இடங்கள் நெல்லையில் இருக்க எங்க தாத்தா ஏன் மதுரைக்கு இடம் பெயர்ந்தாரோன்னு வருத்தமாக இருக்கு. போன பதிவில பாபநாசம் பார்த்தே. அதுவே அருமையாக இருந்தது. இந்தப் பதிவின் படங்கள் அழகை அள்ளித்தெறிக்கிறது. மிகவும் நன்றி சிவராம்குமார்.

  ReplyDelete
 16. நன்றி FARHAN

  வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்!

  ReplyDelete
 17. http://www.victoriamemorial-cal.org/danwatpap.html
  Here is a painting from the late 1700's
  of the falls
  Good post!

  ReplyDelete
 18. இந்த அருவிக்கு நானும் வந்திருக்கேன்..மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது..அந்த இடத்தை விட்டு வரவே மனசு இல்லை..நேரம் இல்லாததால திரும்ப வர வேண்டியதா போயிடுச்சு...அதுக்கு பக்கத்துலயே நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்களா...லக்கிதான் நீங்க...

  ReplyDelete
 19. @ பிரியமுடன் ரமேஷ் - வருகைக்கு நன்றி ரமேஷ்! நான் இப்போ சென்னைல தான் இருக்கிறேன் :-(

  ReplyDelete
 20. பாபநாசம் அருவிக்கு வந்திருக்கிறேன்.. இதுவும் நல்லாயிருக்கும் போல :)))))))

  ReplyDelete
 21. @ மகேஷ்: நீங்கள் பான தீர்த்த அருவியை குறிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! இதுவும் கண்டு மகிழ நல்ல இடம்தான்!

  ReplyDelete
 22. வாவ்..அருமையான இடங்கள்.

  ReplyDelete
 23. மிக அருமையான இடங்கள் மாதேவி!

  ReplyDelete
 24. அட நம்மூரு...........:))

  ReplyDelete
 25. வருகைக்கு நன்றி தமிழ் அமுதன் & கண்ணா!

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 1973-76 வாக்கில் வரலாறு படித்த காலத்தில் தொடர்ந்து மூன்று வருடங்கள் இங்கே சென்றுள்ளேன். மறக்க முடியாத மனதுக்கு ரம்மியமான பகுதி.இன்றும் நெஞ்சில் நிற்கிறது.

  ReplyDelete
 28. உங்கள் சுவையான எழுத்துக்கு மிக்க நன்றி. படித்த அடுத்த மாதத்திலேயே சுற்றுலா கிளம்பி விட்டோம். மிகவும் இனிய அனுபவம். மீண்டும் எங்கள் நன்றிகள்.

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!