Saturday, October 30, 2010

துபாய் காசும்! துன்பியலும்!!



"என்னப்போ! சொவமா இருக்கியா! எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா! பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா!" என்றார் ஊர்ப் பெரியவர் சுடலை.

"எல்லாம் சவுரியம்தான் அய்யா! நீங்க எப்படி இருக்கீக... விவசாயமெல்லாம் எப்படி போகுது?" என்றேன்.

Monday, October 25, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 !!!

மாஞ்சோலை பாகம் 1 & பாகம் 2 படிக்க இங்கே கிளிக்கவும்!

கடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது! அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.

Sunday, October 24, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -2 !!!

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் முதல் பதிவின் சுட்டி இது.. முதல் பாகம் வாசிக்காதவர்கள் அதை கண்டு விட்டு தொடரவும்....

இயற்கையை ரசித்துக் கொண்டே நாங்கள் பயணித்த தவேரா மெதுவா முன்னேறியது... குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே இடையிடையே இயற்கையின் அவசரத்திற்க்கும் சில இடங்களின் அழகை ரசிக்கவும் நிறுத்தி நிறுத்தி சென்றோம்.

Sunday, October 17, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம்!!!

திருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புதுசா ஒரு அனுபவம் கிடைச்ச மாதிரி மனசெல்லாம் துள்ளும்.... கடைசியா நான் அங்கே போனது ஒரு ஆறு மாசத்துக்கு மேலேயே இருக்கும்.... நண்பர் ஒருவர் திருமணத்துக்கு ஊருக்கு போயிருந்தப்போ அப்படியே விடுறா வண்டியைனு ஜூட்... 

Friday, October 15, 2010

திருநெல்வேலி சீமையிலே -3! காரையார் & பாணதீர்த்த அருவி !!!

போன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேலே மலையிலே போனா, உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு அணைக்கட்டு பாக்கலாம்...அந்த அணையோட பேரு காரையார் அணை!

Thursday, October 7, 2010

பாலுணர்வும்! வாளுணர்வும்!! - இருவர்!!!

காலையில் வீட்டுல சும்மா பாட்டு கேட்டுகிட்டு இருக்கும் போது இருவர் பாடல்கள் ஒலித்தது! அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப்படியே புல்லரித்தது! இததனைக்கும் ரெண்டும் வேற வேற உணர்வுகள்; வேற வேற கருத்துக்கள்... ஆனா அதை கேக்கும்போது வர்ற உணர்வு என்னவோ ஒரு சிலிர்ப்பு...

Saturday, October 2, 2010

இளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை!!!

 சின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற "கண்ணன் ஒரு கைக்குழந்தை" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா  அழுகைய நிறுத்திட்டு  சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற "சினி சிட்டி" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ்! அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக!னு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது!)