கமலஹாசனோட பிறந்த நாளில் SPB ஒரு இசைக்குழுவுடன் இணைந்து "கமல்" பாடல்களை மட்டும் பாடி ஒரு கான்சர்ட் நடந்தது. அப்பவே ராஜாவின் இசையில் இவர்கள் இணைந்த பாடல்களை ஒரு தொகுப்பா போடணும்னு நெனச்சேன்.நடுவில கொஞ்சம் பிசியானதால் அது அப்படியே விட்டு போச்சு. ஆனா சமீபத்தில கொடைக்கானல் போகும் போது, கொடை ரோட்டுல இருந்து ஹோட்டல் போற வரைக்கும் அப்படியே நான் உருகி போய்ட்டேன்....
நந்தலாலா - ஒரு மனப்பிறழ்வு கொண்டவனும், ஒரு சிறுவனும், தத்தம் தாயைத் தேடி செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும் அங்கு நடக்கும் சம்பவங்களும் தான் கதை. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை தயவு செய்து திரை அரங்கில் சென்று பார்க்கவும். அதுவே இந்த மாதிரி நல்ல படத்திற்கு நாம் செய்யும் மரியாதை.
சரியா சொல்லனும்னா கிட்டத்தட்ட 15 நாளைக்கு அப்புறம் இப்பதான் வலைக்கு வர நேரம் கிடைச்சது. போன வாரம் கொடைக்கானல், அதுக்கு முந்தின வாரம் பாபனாசம்னு ஊரு சுத்தினதில கணினி முன்னாடி உக்கார நேரமே இல்லை.அலுவலகத்தில இருந்தாலும் பிளாக் எல்லாம் தடை செஞ்சிருக்காங்க.... இனிமே ரெகுலரா வந்திருவோம்.... இதனால எல்லாருக்கும் சொல்றது என்னன்னா "i am back"
திரும்ப திரும்ப அரைச்சு புளிச்சு பூசனம் பூத்து போனாலும் விடாம அதே மாவை தோசையா ஊத்துரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெளியிட்ட தயாநிதி அழகிரிக்கும் வாழ்த்துக்கள்.
கமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன்.
கடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது! அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.