Friday, September 10, 2010

இளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 !!!

ஐய்யா! எல்லாருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புறேன், நான் மேலே சொல்லி இருக்கிற கலாட்டாக்கள் சத்தியமா எந்த வன்முறையையும் குறிக்கவில்லை! நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான்! எதுக்காக இந்த விளக்கம் என்றால், நெல்லையிலே சில கபடி மேட்ச்சுகளால நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கே அந்த விளையாட்டையே தடை செய்ற அளவுக்கு போயிருக்கு...நாங்கல்லாம் கபடியை ஒரு விளையாட்டா மட்டும்தான் பாத்தோம்... நான் கூட என்னோட முந்தைய பதிவு ஒன்னுலே "வெண்ணிலா கபடி குழு" படத்தை ரொம்ப சிலாகிச்சு எழுதி இருப்பேன்... காரணம் அதிலே வந்த நெறைய காட்சிகள் எங்க நிஜ வாழ்க்கையிலே நடந்தது, என்ன நாங்க அந்த பேப்பர் மில் டீமை ஜெயிக்க வில்லை ;-) ஒருவேளை நம்ம கிஷோர் மாதிரி கோச் கிடைச்சிருந்தா நடந்திருக்கலாம்! ஆனாலும் சுசீந்திரன் அந்த படத்துக்கு முடிவிலே ஒரு மென்சோகம் வேணும்ன்னு ஹீரோவ கபடி மேட்ச்லே சாகடிச்சிருப்பாரு, அந்த விஷயத்துலே எனக்கு வருத்தம்தான்... ஏன்னா கபடி உயிரை வாங்குற விளையாட்டு இல்லை... இல்லவே இல்லை!சுத்து வட்டாரத்துலெயெ விளையாண்டுகிட்டு இருந்த நாங்க கொஞ்சம் தூரமா ஒரு மேட்சுக்கு "கடையம்"ங்கிற ஊருக்கு போனோம்... ஒரு கோயில் முன்னாடி இருக்கிற கிரௌன்ட்ல நடந்தது மேட்ச்... முதல் ரௌண்டே ஒரு பெரிய டீம் கூட மோத வேண்டியிருந்தது... எங்களை திணற திணற அடிச்சாங்க, இருந்தாலும் கிளாப்ஸ் எங்களுக்குத்தான்... ஏன்னா நாங்க எல்லாருமே பாக்க சின்ன பசங்களா இருப்போம் அப்போ! கடைசியா நாங்க 9 பாயிண்ட் அவங்க ஏதோ இருபதுகள்ளே ஒரு பாயிண்ட்... உடனே மூட்டைய கட்டாம காலையிலே வரைக்கும் அங்கேயே இருந்து மேட்செல்லாம் பாத்துட்டு வந்தோம்...ஊருலே பஸ்ஸை விட்டு இறங்குன உடனே எதுதாப்லே வந்த ஒரு அண்ணன் "ஏலே, என்ன ஆச்சு டா மேச்சு "ன்னாரு! எல்லாரும் ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்... 9 பாய்ண்ட்டுலே தோத்து போய்ட்டோம் என்றோம்... பரவா இல்லைடா பெரிய டீம் கூடத்தானே... அடுத்த தடவை பாத்துக்கிடலம்னு சொல்லிட்டு கெளம்பிட்டாரு... நாங்க எல்லாரும் ஒரு சிரிப்பு சிரிச்சோம் பாருங்க... மறக்கவே முடியாது...

இன்னொரு முறை பக்கத்து ஊருலே ஒரு மேட்ச்! வேற ரெண்டு அணிகள் விளையாடுறாங்க, திடீர்னு ஏதோ பிரச்சினை, வார்த்தைகள் தடிச்சிரிச்சு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க ! திடீர்னு ஒரு பையன் மைக் செட்டு இருந்த இடத்திலே ஒரு கம்பை எடுக்க போனான்... திடீர்னு ஒரு சவுண்ட், "டே"னு எல்லாரும் சண்டையெல்லாம் நிறுத்திட்டு அப்படியே ஸ்டன் ஆயிட்டாங்க ... குரல் குடுத்த ஆளை பாத்தா ரொம்ப கெச்சலா , ஓங்கி அடிச்சா செத்து போற மாதிரி இருந்தாரு... எங்களுக்கு எல்லாம் ஒரே வியப்பு! எப்படிடா இந்த ஆளுக்கு இப்படி ஒரு தைரியம்னு.... " சண்டை போடுறதா இருந்தா அங்கே போயி போடு.. இதென்ன தெரியுமா கரண்டு.... ஷாக் அடிச்சா செத்துருவே"னு சொன்னவுடனே சுத்தி இருக்க எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த சண்டை அப்படியே நீர்த்து போச்சு... இன்னும் எங்க நட்பு வட்டாரத்திலே "டேய்! கரண்ட்டு" அப்படிங்கிறது ஒரு பேமஸ் டைலாக் !

பக்கத்து ஊருலே நடந்த மேட்ச்லே நாங்க 3rd பிரைஸ்... கப்பும் ஷீல்டும் முதல், இரண்டாவது இடத்துக்குத்தான் கொடுப்பாங்க சில இடத்திலே! எங்க டீமோட கப் அவங்க கிட்ட இருந்தது (அதாவது, இந்த வருஷம் கப் ஜெயிச்சா அடுத்த வருஷம் வரை ஜெயிச்ச டீம் கிட்ட தான் இருக்கும், அடுத்த டோர்னமென்டுக்கு திருப்பி வாங்கிருவாங்க) அது போல அவங்க கிட்ட இருந்த கப்பை வாங்கிட்டு வந்தோம்! ஊரு எல்லைகிட்டே வந்த உடனே, அந்த கப்ப அப்படியே பயங்கர ஸ்டைலா தலைக்கு மேலே தூக்கிட்டு "பனை மரத்துலே வௌவாலா! வேங்கைக்கே சவாலா"னு செம சவுண்டு! ஊருலே இருக்கிறவங்கலாம் நம்ம பயலுக பரவா இல்லைப்பா, முதல் பிரைஸ் ஜெயிச்சிட்டாணுவ போலன்னு பெருமையா பேசிக்கிட்டாங்க! நாங்களும் அப்படியே கமுக்கமா அதை மெயின்டைன் பண்ணிகிட்டோம்!

அப்புறம் கபடி மேட்ச் நடக்கிற ஊருலே எல்லாம் பாக்க வர்ற பொண்ணுங்களுக்கு பயங்கரமா ரூட் கொடுக்க வேண்டியது, ஆனா இதிலே காமடி என்னான்னா கொஞ்சம் நம்ம கிட்ட பேசுற பொண்ணுங்களை கூட திரும்ப் அடுத்த மேட்ச்க்கு வரும்போதுதான் பார்ப்போம்...அப்ப செல்போன் இல்லை, ஒன்னும் இல்லை. ஆனாலும் கூட திரும்ப அடுத்த மேட்ச் நடக்கும்போது சரியா ஞாபகம் வெச்சு சில பொண்ணுங்க பேசுவாங்க... அதோட கொடுமை சில பொண்ணுங்க கல்யாணம் முடிச்சு ரெண்டு பேரா இருப்பாங்க... பொண்ணுங்க ஆடியன்ஸ் அதிகமா இருந்தாதான் நான் ரெய்டு போவோம்னு சொல்ற பசங்க இருக்காங்க... அதோட காமடி அவனுங்க செமையா எதிர் டீம்கிட்டே உதை வாங்க நாங்களே வேண்டிப்போம்! மாட்டிகிட்டங்கன்ன அவனுக பாடு திண்டாட்டம்தான்... வேடிக்கை பாக்குறவங்க எல்லாரும் சேர்ந்து செம கிண்டல் பண்ணிருவாங்க....

இப்படியா நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஜாலியா போய்கிட்டு இருந்த கபடி மேட்சுக்கள், கிரிக்கெட் ஜுரம் பரவ ஆரம்பிச்ச உடனே கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது என்னவோ உண்மைதான்... ஆனா இப்போ கபடி பேரை சொல்லிக்கிட்டு நடக்கிற வன்முறைகளால நெல்லை மாவட்டத்திலே கபடியையே தடை பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்ட போது ரொம்ப வருத்தமா இருக்குது... நாம் உறுதியா சொல்வேன், எங்கே, எப்போ கபடி நடந்தாலும் அதுலே நம்பர் ஒண்ணா இந்தியா வரும்... அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நம்மகிட்டே இருக்காங்க... விளையாட்ட தடை பண்றது தீர்வு அல்ல... இதை அதிகாரிகளும் காவல் துறையும் புரிஞ்சிக்கிட்டு, சில விதிமுறைகளோட கபடி விளையாட்டை திருமப்வும் தொடர அனுமதி கொடுத்தா நான் மட்டும் இல்லை நெல்லை மாவட்டமே சந்தோசப்படும்....


நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

9 comments:

 1. அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யாதவன்!

  ReplyDelete
 3. ///இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்!!!(அப்படின்னா நீ எழுதவே கூடாதுடானு உள்ளே ஒரு குரல் கேக்குது ;-)///

  ஹா ஹா... உண்மையில் இது சூப்பர்...
  எனக்கு ஒரே சிரிப்பா வருது.. சிரிச்சு முடியல.. :-))

  ReplyDelete
 4. //ஆனாலும் சுசீந்திரன் அந்த படத்துக்கு முடிவிலே ஒரு மென்சோகம் வேணும்ன்னு ஹீரோவ கபடி மேட்ச்லே சாகடிச்சிருப்பாரு, அந்த விஷயத்துலே எனக்கு வருத்தம்தான்... ///

  எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும்.. அந்த முடிவு சோகம் தவிர..
  எனக்கும் வருத்தம் தான்...
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 5. @ ஆனந்தி - இப்பல்லாம் பாதி டைரக்டர்ஸ் முடிவுலே சோகம் வேணும்ன்னு தினிக்கிறாங்க... அது நம்ம மனதை எந்த விதத்திலேயும் பாதிக்காது...

  ReplyDelete
 6. ///@ ஆனந்தி - இப்பல்லாம் பாதி டைரக்டர்ஸ் முடிவுலே சோகம் வேணும்ன்னு தினிக்கிறாங்க... அது நம்ம மனதை எந்த விதத்திலேயும் பாதிக்காது...///

  :-))))

  ReplyDelete
 7. ///கபடி உயிரை வாங்குற விளையாட்டு இல்லை... இல்லவே இல்லை!///

  கபடி விளையாட்டுல உங்களுக்கு இருக்கற பற்றுதலை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.. விளையாட்டை ரொம்ப ரசிச்சு விளையாடி இருக்கீங்க சிவராம்குமார்..

  நானும் ஸ்கூல்ல விளையாடியிருக்கேன்.. ஆனா எப்ப விளையாடினாலும் கைகலப்பு ஆயிட்டதால ஸ்கூல்ல கபடியைத் தடை பண்ணீட்டாங்க..

  ஆனா விளையாடறப்போ ஒரு ஸ்பிரிட் வரும் பாருங்க.. அதுமாதுரி வேற விளையாட்டுகள்ல நான் ஃபீல் பண்ணினது இல்ல..

  நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. நன்றி பாபு! கண்டிப்பா அந்த உணர்வு வேறு எந்த விளையாட்டிலும் வருவதில்லை...:-)

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!