Monday, September 20, 2010

துரோகி - ஒரு பார்வை!


 தமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.


ஆரம்பமே அசுர வேகத்தில் இருக்கிறது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரின் உள்ளே சென்ற என்னை முதல் காட்சியே நிமிர்ந்து உக்கார செய்தது. ஸ்ரீகாந்த் ஒரு தண்டவாளத்தில் கட்டாப்பட்டு இருக்கிறார், 21 ரெயில்கள் கடந்தவுடன் வரும் அடுத்த ரெயில் தன் மேல் ஏற  போவதாக சொல்கிறார்! அட! வித்தியாசமா இருக்கே என்று நினைக்கிறோம் நாம். ஸ்ரீகாந்தின் நினைவலைகளில் படம் பின்னோக்கி நகர்கிறது.

இரு 10 வயது சிறுவர்கள் சாமி, கருணா உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். கருணா வட சென்னையை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்து பையன். சாமி அதே பகுதியை சேர்ந்த ஒரு  அய்யர் வீட்டு பையன். கருணாவிற்கு ஒரு அய்யர் மாமியிடம் அந்த வயசிலேயே ஈர்ப்பு... அவளுடைய பெண்ணைத்தான் தான் கல்யாணம் பண்ண போவதாக கூறுகிறான்... காரணம் இவளுடைய 50 % அழகாவது அவளுடைய மகளுக்கு இருக்குமாம்!!! அவர்களின் பள்ளிக்கு வரும் புது ஆசிரியை (பூஜா) சில ரௌடிகளால் தாக்கப்பட்டு இறக்கிறாள். அவளை கொன்றவர்களை பழிவாங்க நினைக்கும் கருணாவிற்கு சாமி ஐடியா கொடுக்கிறான். ( சின்ன பசங்க ஸ்கெட்ச் போடுவதெல்லாம் ரொம்ப ஓவரு!). இந்த திட்டத்தில் மாட்டிக்கொள்ளும் கருணா, தன்னை போலிசிடம் மாட்டி விட்ட சாமியை எதிரியாக கருதுகிறான். இவர்கள் வளர்ந்து ஆடும் ஆடு புலி ஆட்டமே படம்.

சாமியாக ஸ்ரீகாந்த்! சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு தாதாவிடம் அடைக்கலமாகி ரௌடியாகி  அதற்க்கு காரணமே தன் நண்பன் கருணாதான் என்று அவனை பழி வாங்க துடிக்கும் ஒரு காரக்டர். அமுல்பேபி போல் இருந்தாலும் ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது நடிப்பில். அந்த இதழோரத்தில் உண்டாக்கும் ஒரு இகழ்ச்சி புன்னகையும், கண்களில் காமிக்கும் அந்த அலட்சியமும் வேறு ஒரு ஸ்ரீகாந்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

கருணாவாக விஷ்ணு! IPS தேர்வுக்கு தயாராகும் அதே சமயத்தில் ஸ்ரீகாந்தை கண்டாலே கடித்து குதற துடிக்கும் ஒரு கேரக்டர்.என்னை பொறுத்த வரை இந்த இரண்டு பேரில் ஸ்ரீகாந்த் ஈசியாக ஸ்கோர் செய்கிறார்.

இரண்டு கதாநாயகிகள், பூனம் பாஜ்வா (இரட்டை வேடம் வேறு ) மற்றும் பூர்ணா! அம்மாவாக வரும் பூனம் ஓகே. பூர்ணாவிடம் நிறைய மணிரத்னம் பட கதாநாயகிகளின் சாயல். இயக்குனர் மணியின் சீடராம்....

தாதாவாக தியாகராஜன்... இன்னும் எத்தனை காலம்தான் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நடிக்க போகிறாரோ! இந்த கேரக்டருக்கு ஓகே.! கௌரவ வேடத்தில் s .p .சரண்... அப்படியே ஒரு அய்யராத்து அம்மாஞ்சியாக பின்னுகிறார் மனிதர். விஷ்ணு இவரிடம் பெண் கேட்க செல்லும் இடம் கல கல! டீச்சராக வரும் பூஜா அழகு!

காதல் காட்சிகள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஸ்ரீகாந்த் - சொர்ணா மற்றும் விஷ்ணு - பூனம் தலா ஒரு காதல் பாடல் காட்சிக்கு உதவியிருக்கிறார்கள் அவ்வளவே!

அல்போன்ஸின் ஒளிப்பதிவு சில இடங்களில் அருமை.. பல இடங்களில் ஓகே. மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் செல்வகனேஷின் இசை, பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் ஒன்றுமே மனதில் நிற்கவில்லை.

நிறைய பார்த்த கதைஎன்றாலும் ஓரளவிற்கு ஒரு விறுவிறுப்பான திரைக்கதையால் முதல் பாதி ஓகே. பின்பாதியில் தமிழ் சினிமா இலக்கணங்களுக்கு உட்பட்டு வன்முறை, பழிவாங்கல், நண்பர்கள் இணைவது என "too much to digest ". சுதாவிடம் மணியின் பாதிப்பு பூர்ணா கேரக்டரிலும் மற்றும் நெல்லைத்தமிழ்(!) பேசும் அந்த அம்மாவிடமும் தெரிகிறது.

துரோகி - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுதா!

 நட்புடன்,

உங்கள் நண்பன் சி்வா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்

11 comments:

 1. நல்ல விமர்சனம் சிவா!
  முதல்முறையாக டிவில போடும்போது பார்த்துக்குவோம் :)

  ReplyDelete
 2. படம் பாக்கலாமா வேணாமா?

  ReplyDelete
 3. சீக்கிரமே பாக்கலாம் பாலா!

  நெஜமாவே ரொம்ப ப்ரீயா இருந்தா போயி பாருங்க பாண்டி!

  நன்றி புதுவை சிவா!

  ReplyDelete
 4. \\பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுதா!\\

  \\சீக்கிரமே பாக்கலாம் பாலா!

  நெஜமாவே ரொம்ப ப்ரீயா இருந்தா போயி பாருங்க பாண்டி!\\

  நீங்க பின்றீங்க பாஸ் !

  \\பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!\\

  நீங்க அதத்தான் செய்து இருக்கிறீர்கள் உங்க விமர்சனத்தில். படம் நல்லா இல்லைன்னு காட்டமா சொல்லாமல் இந்த மாதிரி நாசூக்க சொன்னது நல்ல விஷயம்.

  ReplyDelete
 5. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபி!

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!