Thursday, November 11, 2010

வ - குவாட்டர் கட்டிங்!!!


திரும்ப திரும்ப அரைச்சு புளிச்சு பூசனம் பூத்து போனாலும் விடாம அதே மாவை தோசையா ஊத்துரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெளியிட்ட தயாநிதி அழகிரிக்கும் வாழ்த்துக்கள்.கதையோட ஒன் லைன் என்னதான் சீமை சரக்கா (harold & kumar Go to white castle ) இருந்தாலும் அதை அப்படியே நம்ம குவாட்டர் பாட்டில்ல ஊத்தி கொடுத்திருக்காங்க. அப்படியே ஜிவ்வுன்னு தூக்கலைன்னாலும் அந்த டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா ஒரு டைப்பாதான் இருக்கு.


கிட்டத்தட்ட எல்லாருக்கும் கதை என்னான்னு தெரியும், அதனால மத்த விஷயத்தை பார்க்கலாம். படம் ஆரம்பிச்சவுடனே அந்த டைட்டில், அதுல வர்ற கார்ட்டூன் எல்லாம் ஷோக்கா கீது.  அத்து முடிஞ்சவுடனே ஒரு பத்து கேரக்டரை காமிக்கிறாங்க (அதுல ஒண்ணு நம்ம ஒத்தைக் கண் அம்மன்), நம்ம சாருஹாசன் குரல்ல(அவருதானா அது!!!) ஆனா அது சும்மா ஒரு பில்ட்-அப்பா இல்லாம கிளைமாக்ஸ் வரைக்கும் யூஸ் பண்றாங்க. அது புச்சா கீது....


"ஜெய் பாலக்ரிஷ்ணா"னு அவரோட படத்தை பார்த்துட்டு சென்னைக்கு வந்து இறங்குறாரு நம்ம சிவா( ஹீ ஹீ ஹீ! நம்ம பேரு வேற வெச்சுக்காறு!).... எனக்கு ஒரு சந்தேகம்... கோவைல இருந்து வர்ற பஸ்சுல எப்படி தெலுங்கு படம் போடுறாங்க! இந்த மாதிரி பயங்கரமா லாஜிக் பாக்குறவங்க பேசாம லாஜிக்கோட பேரரசு படமோ இல்லை A.வெங்கடேஷ் படமோ பாருங்க.... காலயில நாலு மணிக்கு துபாய்க்கு பிளைட்டு. அதுக்குள்ளே ஒரு குவாட்டர் அடிக்க அவரு படுற கஷ்டமும், கூட சேர்ந்து SPசரண் படுற கஷ்டமும் தான் கதை. கடைசில "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்! ஆனா கைவிட மாட்டான்"  அப்படிங்கிற சூப்பர் மொழிக்கு தகுந்தா மாதிரி முடிவு.


சிவாவை விட சரண்தான் கலக்குறாரு, அந்த அப்பாவி மூஞ்சும், அந்த கொழு கொழு உடம்பும்( யாரு கண்ணு பட்டதோ மனுஷன் இப்போ துரும்பா ஆயிட்டாரு). ஆனா என்ன சிவா மாதிரி அவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி படமா பண்றாங்க. நடுவில லேகா எதுக்கு? ரெண்டு பாட்டுக்கும், கண்டிப்பா ஒரு ஹீரோயின் வேனுங்கிரதுக்கும்தான். வேற. வேற ஒன்னும் இல்லை.


ஜான் விஜய், ரெண்டு ரோல் வேற. பையன் ஓகே, அப்பா M .R .ராதா குரல்ல மிமிக்ரி பண்ணி நமக்கு கடுப்பு ஏத்துறார். டைரக்டருக்கு நண்பனா இருந்தா இந்த வசதி எல்லாம் கெடைக்கும்!!!!


அந்த பத்து கேரக்டர்ல, அந்த தீக்குச்சியும், சைதை சிங்காரியும், அரசியல்வாதி கல்யானும் தூள்.


G .V .பிரகாஷின் இசை, சத்தியமா ஒரு பாட்டும் மனசில நிக்கலை. பின்னணி இசை ஓகே ரகம்.இந்த கதையும் பாட்டுக்கு ரொம்ப ஸ்கோப் உள்ள கதை கிடையாது, அதனால அவரை குறை சொல்ல முடியாது.

படத்தோட ஹீரோ நீரவ் தான், சென்னையோட இரவு வாழ்க்கைய அப்படியே ஒரு வித்தியாசமான கலரில் படம் பிடிச்சிருக்கார்.பின்னி பெடல் எடுத்திருக்கார் மனுஷன். வாழ்த்துக்கள்.

இயக்குனர் இணை புஷ்கர்-காயத்ரி. இவங்களோட ஓரம்போ எனக்கு ரொம்ப பிடிச்சது, தமிழ் சினிமாக்குன்னு இருந்த இலக்கணம் எல்லாத்தையும் உடைச்சி எறிஞ்ச படம். அதே நம்பிக்கையோட தான் போனேன். திரைக்கதையில் நெறய இடத்தில ரொம்ப தொய்வு, சில இடங்கள் ஆஹான்னு இருந்தாலும் பல இடங்க ரொம்ப இழுவையா இருந்தது. எடிட்டரோட கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்திருக்கலாம்.

ஒரு ராத்திரியில நடக்கிற கதையில ஒரு பாட்டுக்கே இடம் இல்லை, ஆனா படத்துல நாலஞ்சு பாட்டு... ஏன்??? யாரோட நிர்பந்தம்??? வித்தியாசமான படம்னு முடிவு பண்ணியாச்சுல, அப்புறம் எதுக்கு பாட்டு, அந்த லூசு ஹீரோயின்... யோசிக்காம ஒரு அரை மணி நேரம் கட் பண்ணி இருந்தா நெறைய பாசிடிவ் விமர்சனம் வந்திருக்கும். ஆனாலும் நாங்க படம் எடுத்தா பார்முலா படமா இருக்காதுன்னு சொல்ற உங்க தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்!

எனக்கு பிடித்த காட்சிகள்:

பைக்க ஏன் கொளுத்திரேன்னு தீக்குச்சி(கேரக்டர் பெயர்) கொடுக்கிற விளக்கமும், உடனே சரண் என் வீட்டில ஒரு TVS champ இருக்கு அப்புறமா வந்து கொளுத்துன்னு சொல்றது.

முதல் சீன்ல அந்த பத்து கேரக்டரின் அறிமுகம்

சரணைப் பத்தி இருக்கிற சஸ்பென்சும் அதை பத்தின அவரின் கதை சொல்லலும்

நெறைய இடங்களில் யோசிச்சு அப்புறம் சிரிக்க வைக்கிற வசனங்கள்

ஒத்தைக் கண் அம்மன் சிவாவைக் காப்பாத்துற சீன்.


வ - குவாட்டர் கட்டிங் ----- வித்தியாசத்தை விரும்புவர்களுக்கான படம்; சில இடங்களில்   நமத்து போன பப்படமாக இருந்தாலும்!

டிஸ்கி: ஒரு குவாட்டருக்கு இப்படி யாராவது அலைவாங்களானு நெறைய பேரு கேக்குறாங்க.... என் வாழ்க்கையிலே நைட்டு ரெண்டு மணிக்கு ஒரு குவாட்டருக்கு வேண்டி நாயா பேயா இதே சென்னைல என் நண்பர்களோட அலைஞ்ச அனுபவம்  உண்டு....(சரக்கு எனக்கில்லை! அவங்களுக்கு!!!)

நட்புடன், 
உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

25 comments:

 1. சரண் லண்டன் போய் ஆபரேஷன் செய்து உடம்பை குறைத்து உள்ளார். யார் கண்ணும் படவில்லை..

  ReplyDelete
 2. என் வாழ்க்கையிலே நைட்டு ரெண்டு மணிக்கு ஒரு குவாட்டருக்கு வேண்டி நாயா பேயா இதே சென்னைல என் நண்பர்களோட அலைஞ்ச அனுபவம் உண்டு....(சரக்கு எனக்கில்லை! அவங்களுக்கு!!!)

  //ஏலே! அம்புட்டு நல்லவனா நீயி....???
  ...............

  சொல்லவே இல்ல..,!!!

  ReplyDelete
 3. @Sai Gokulakrishna : சொல்லிட்டோம்ல மக்கா! நாங்கலாம் நல்ல்வங்கல்லையே முக்கியமானவங்க!

  @அமுதா கிருஷ்ணா: பகடிக்காக அப்படி எழுதினேன் அமுதா! வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 4. சில பேர் "வ" "உவ்வே.." வா இருக்குன்னு சொல்றாங்க... ;-)

  ReplyDelete
 5. @RVS: நெறைய பேரு அப்படிதான் சொல்றாங்க... ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை!

  ReplyDelete
 6. ஓகே பார்க்கலாமா!

  ReplyDelete
 7. தங்கள் பதிவை பார்க்கவே படம் எப்படி என தெரிகிறது .. அருமையாக இரக்கிறது.ரு

  ReplyDelete
 8. அப்பன்னா கண்டிப்பா படம் பாத்தே ஆகணும்குறீங்க.

  ReplyDelete
 9. பாடம் பாக்கலை இன்னும். விமர்சனம் நல்லா இருக்கு

  ReplyDelete
 10. வழக்கம் போல விமர்சனம் "டாப்"பு மாப்பு!

  ReplyDelete
 11. "சிவா".. ஹீரோ பேரும் உங்க பேரும் ஒன்னா இருக்கறதால உங்க விமர்சனம் செல்லாது.. :-))

  ReplyDelete
 12. படத்தைப் பார்க்கறதுக்கு முன்னாடி உங்க விமர்சனத்தைப் பார்த்த கண்டிப்பா போய் படம் பார்த்திருப்பேன்.. ஆனால் நான் பார்த்துட்டேனே!!!

  ReplyDelete
 13. உங்க விமர்சனம் சூப்பர்..

  ReplyDelete
 14. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று எனது பதிவில் பின்னூட்டமிட்ட சிவா தானே நீங்கள்... ஏன் இந்த கொலைவெறி... அனேகமா எனது பதிவில் கடைசியா அனானி பெயரில் பின்னூட்டம் போட்டதும் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்... (நீங்கள் இல்லையெனில் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)

  http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_08.html

  ReplyDelete
 15. நல்ல ரிவ்யூ.. வோட் போட்டாச்சு.. போட்டாச்சு..

  பகிருவுக்கு நன்றிங்க.. :-))

  ReplyDelete
 16. பாக்கலாம் எஸ்.கே., விமலன்!

  நன்றி சுதா, கோபி, பாலா, ஆனந்தி!

  @ பாபு - விடுங்க பாபு! எப்படி பார்த்தாலும் நம்ம சிவா!

  @ பிரபாகரன் - எல்லாரோட விமர்சனத்தையும் படிச்சிட்டு அப்படிதான் நெனச்சேன்.... ஆனா நான் பார்த்த பின்னாடிதான் இந்த விமர்சனம்... எனக்கு பிடித்தது படம்...

  அது என்னயா பெரிய பின்னூட்டம்.... அதுக்கு அனானியா வேற வரணுமா.... அய்யோ! அய்யோ!!! அரைச்ச மாவுனு ஒரு வார்த்தை இருந்தா அது நான்தானா.... என்ன கொடும இது... அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

  ReplyDelete
 17. ஆனா எனக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை......நண்பரே

  ReplyDelete
 18. ம்ம்...தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிச்சுக்கோங்க சிவா...எனக்கும் இந்த படம் ரிலீஸ் க்கு முன்னாடி இருந்தே ஒரு ஆர்வம் இருந்தது...காரணம் "ஓரம் போ"படம்...ரொம்ப பிடிச்சிருந்த படம்...ரொம்பவே அதிகமாய் சிரிச்சிருக்கேன் அந்த படம் பார்த்து...அதுவும் ஜான் விஜய் கதாபாத்திரம் செம கிளாஸ் இல்லையா அந்த படத்தில்...க்ளைமாக்ஸ் கூட ரொம்பவே வித்யாசமா இருந்தது அந்த படத்தில்...அதை வச்சு தான் இந்த படமும் நல்லா இருக்கும்னு நினைச்சேன்...ஆனால் கேள்வி பட்ட வரையில் யாருமே சரியா சொல்லலை...சோ படம் பார்க்கவும் யோசனை தான்...படத்தில் நிறைய ஆபாச வசனங்கள் இருக்குனு கேள்வி பட்டேன் உண்மையா சிவா?..(பெண் இயக்குனர் இருந்துமா??) உங்க விமர்சனம் கொஞ்சம் பாசிட்டிவ் ஆ இருக்கு...டிவிடி யில் பார்க்க வேண்டியது தான் போலே...)))..தரமா இருக்கு விமர்சனம்..வாழ்த்துக்கள் சிவா...!!

  ReplyDelete
 19. //சரக்கு எனக்கில்லை! அவங்களுக்கு!!!//

  ஏன்யா இப்பிடி எஸ்கேப்பாகுறீங்க!!!

  ReplyDelete
 20. Nice Review..

  http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

  ReplyDelete
 21. @ டெனிம்: ரசனைகள் மாறுபட்டது நண்பா!

  @ஆனந்தி: விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!

  @விந்தைமனிதன்: நான் உண்மைய சொன்னேன்!உண்மைய சொன்னேன்!

  @அஹமது இர்ஷாத் : நன்றி நண்பா! உங்கள் வலைச்சரத்தில் என் பதிவைத் தொடுத்ததர்க்கு!

  ReplyDelete
 22. எனக்கு ஏனோ இந்தப்படத்தை பார்க்கணும்ம்னு தோணவே இல்லை.. மைனா 4வது வாட்டி பார்த்தாச்சு

  ReplyDelete
 23. சிவா! உங்கள் விமரிசன பாணி அற்புதமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!