Saturday, November 27, 2010

சரவெடி & அதிரடி - 27/11/2010

சரியா சொல்லனும்னா கிட்டத்தட்ட 15 நாளைக்கு அப்புறம் இப்பதான் வலைக்கு வர நேரம் கிடைச்சது. போன வாரம் கொடைக்கானல், அதுக்கு முந்தின வாரம் பாபனாசம்னு ஊரு சுத்தினதில கணினி முன்னாடி உக்கார நேரமே இல்லை.அலுவலகத்தில இருந்தாலும் பிளாக் எல்லாம் தடை செஞ்சிருக்காங்க.... இனிமே ரெகுலரா வந்திருவோம்.... இதனால எல்லாருக்கும் சொல்றது என்னன்னா "i am back"

---------------
இத்தனை வேலைக்கும் நடுவில, வந்த படங்கள் சிலது தவிர எல்லாம் பாத்தாச்சு... அதுக்கு மட்டும் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ.... மந்திரப் புன்னகை இன்னும் பாக்கல! நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், கண்டிப்பா பாக்கணும் கரு.பழனியப்பனுக்காக! இருந்தாலும் எனக்கு பிடிச்ச இயக்குனர்கள் எல்லாரும் நடிக்க வந்திட்டாங்க... வேணாங்க! நீங்க ஆடுறதை விட ஆட்டுவிக்கிறதுதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு!!!
---------------
ஊருக்கு போனதுல நெறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கு... அதெல்லாம் கண்டிப்பா ஒரு தனி பதிவா போடணும்... இதில கொடைக்கானல் போனது அலுவலக நண்பர்களோட! எப்போடா அதை பத்தி பதிவு எழுதப் போரேன்னு வேற அவங்களோட  நச்சரிப்பு... இன்னுமா இந்த ஊரு என்னை நம்புது!!!! அவ்வ்வ்வவ்வ்வ்!!! என்ன வேணா சொல்லுங்க! நம்ம என்னதான் கேவலமா, காரி துப்புற மாதிரி ஒரு காரியம் பண்ணினாலும் அதிலும் ஒரு பிளஸ் பாய்ண்டை (ஒண்ணுமே இல்லாட்டி கூட)  சொல்லி நம்மளை தூக்கி விடுற நண்பர்களுக்கு ஒரு பெரிய வந்தனம்..... அவங்க இல்லைன்னா நம்மலாம் அடுத்த அடி எடுத்து வைக்கிறது கூட இயலாத காரியம்!!!
---------------
கொடைக்கானல் போயிட்டு செவ்வாய்க்கிழமையே வந்துட்டேன்... ஆனா அங்கே ஆடுன ஆட்டத்தில இன்னும் கால் வலி போகல!!! ஒரு வேலை ஒரு வ அதாங்க குவாட்டர் உள்ளே போயிருந்தா வலி இருந்திருக்கிறதோ என்னமோ!!!
---------------
ஏற்கனவே மைனா & வ விமர்சனம் எழுதியாச்சு... அப்புறம் பார்த்த படங்கள் எதுவும் பெருசா என்னை கவரவில்லை... அதனால அந்த படங்களின் குட்டி விமர்சனம் இங்கே!!!

உத்தமபுத்திரன்




கதை: நண்பனுக்காக அவனோட காதலியை கடத்தப் போயி வேற பெண்ணை மாத்தி தூக்கிட்டு வர்ற கதாநாயகனுக்கும் அவரு தூக்கிட்டு வந்த பெண்ணுக்கும் இடையில காதல்... நாயகியின் குடும்பத்தோட சம்மதத்தோட எப்படி அவளை கரம் பிடிக்கிராருங்கிறது அதாகப்பட்ட கதை.

பிளஸ்:  
விவேக், விவேக் & விவேக்!

மைனஸ்:
லூசு மாதிரியே நடிக்கிற ஜெனீலியா, ஆந்திர மசாலா அதிகமா அடிக்கிற திரைக்கதை, ஜெயம் ரவிக்கான கதையில் தனுஷ் நடிச்சது, தெலுங்கில ஹிட்டானா தமிழிலும் கண்டிப்பா ஹிட்டுன்னு நெனச்சு நம்ம ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை மாற்றி அமைக்காதது.

உத்தமபுத்திரன் - விவேக்கிற்க்காக மட்டும்!
---------------
வல்லக்கோட்டை


கதை: மலையாளத்தில நம்ம மம்மூக்கா நடிச்ச "மாயாவி" படத்தை அப்படியே இங்கே!!!

பிளஸ்: ஆளை விடுங்க சாமி!!!

மைனஸ்: இதை தனியா வேற விளக்கனுமா!!!! ஆனாலும் "தமிழ் படம்" மாதிரி படங்கள் நம்ம ஹீரோக்கள் போடுற மாறு வேஷத்தை எவ்வளவு கிண்டல் அடிச்சாலும் அதைப் பத்தி கவலைப் படாம பல வேஷம் (!) போடுறார் அர்ஜூன்! தேவுடா....

வல்லக்கோட்டை - நல்லா வந்துரப் போகுது வாயில!!!
---------------






நகரம்:




கதை: திருந்தி வாழ நினைக்கிற ஒரு ரவுடி தன் நண்பனால் மீண்டும் அதே தொழிலுக்குள்  சிக்கிக் கொள்வது

பிளஸ்: வடிவேலுவின் காமடி(என்னதான் அதே ஸ்டைலா இருந்தாலும்), விறுவிறுப்பான திரைக்கதை, கடைசி அரை மணி நேரப் படம், அனுயாவின் கவர்ச்சி

மைனஸ்: அரதப் பழசான கதை, ஹீரோ, மற்ற எல்லாம்

நகரம் - சுந்தர்.சியிடம் நாம் விரும்புவது "உள்ளத்தை அள்ளித் தா" "மேட்டுக்குடி" போன்ற படங்களைத்தான்!
---------------

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

12 comments:

  1. நன்றி கோபி! நண்பர்கள் எல்லாருடைய பதிவையும் படிக்க வேண்டும்.... விரைவில் படித்து பின்னூட்டமிடுகிறேன்!

    ReplyDelete
  2. "i am back"//

    ரைட்டு...தொடருங்கள்..

    ReplyDelete
  3. வெல்கம் பேக். ஸ்பீட் விமர்சனங்கள் நல்லா இருக்கு. ;-)

    ReplyDelete
  4. welcome back!
    வழக்கம்போல் தொகுப்பு சிறப்பு!

    ReplyDelete
  5. \\சரவெடி & அதிரடி - 27/12/2010 \\

    27/11/2010?!

    ReplyDelete
  6. வாங்கோ

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்... நந்தலாலா படம் எப்போ பாக்க போறீங்க...

    ReplyDelete
  8. நன்றி ஹரிஸ்,RVS,எஸ்.கே & KANA VARO

    ReplyDelete
  9. நன்றி கோபி! மாத்தியாச்சு!

    நன்றி பிரபாகரன்! நந்தலாலா நேத்து பாத்தாச்சு... இன்னும் அந்த தாக்கத்தில இருந்து மீள வில்லை... அனேகமா இன்னைக்குள்ள விமரிசனம் எழுதுவேன்!

    ReplyDelete
  10. ///அலுவலகத்தில இருந்தாலும் பிளாக் எல்லாம் தடை செஞ்சிருக்காங்க.... ///
    :(((((

    ///இனிமே ரெகுலரா வந்திருவோம்.... இதனால எல்லாருக்கும் சொல்றது என்னன்னா "i am back"///
    :))))))


    ஒரு பதிவிலேயே தீபாவளி படங்களின் விமர்சனங்களை தந்து அசத்திவிட்டீர்கள்

    ReplyDelete
  11. வாங்க பாஸ்!
    கொடைக்கானலுக்கு ஒரு டிக்கெட் ப்ளீஸ் :)

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!