Friday, September 17, 2010

சிக்கன் பக்கோடாவும்! சிக்குன்னு ஒரு பொண்ணும்!!



"விநாயகனே வினை தீர்ப்பவனே"னு உச்சஸ்தாயில் தள்ளி இருக்கிற  கோயிலில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து கேசம் கலைந்த தலையுடன் முகத்தில் களைப்புடன் சில பெண்கள் நேத்து பாத்த சீரியல் பத்தி ரொம்ப தீவிராமக ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள். பழைய லுங்கியை மடித்து கட்டி, பீடி ஒன்றை பற்ற வைத்தான் முருகேசன். வாங்கும் போது குருடாக இருந்த அவன் முண்டா பனியனில் இப்போது ஆயிரம் கண்கள்!  நரை முடி தலைஎங்கும் பரவ ஆரம்பித்து விட்டது... வீட்டுலே பொண்டாட்டியை கொஞ்சும் போது " முடியெல்லாம் நரைச்சு போனாலும் உனக்கு ஆசை மட்டும் நரைக்கலைய்யானு" அவ வெட்கப் பட்டதை நெனச்சு மெதுவா சிரிச்சிகிட்டான்.



டிவிஎஸ் 50யை ஸ்டாண்டு போட்டுட்டு உள்ளே வந்த தன் மகனிடம் "ஏலே ராசா! அந்த மேசைய கொஞ்சம் முன்னாலே தள்ளி போட்டுட்டு அப்படியே கடை வாசலிலே கொஞ்சம் தண்ணியை தெளிப்பா" என்றான்.

கடைன்னவுடனே ஏதோ பெரிய கடைன்னு நெனச்சிராதீய, ஒரு சின்ன கோழி இறைச்சி கடை. சாயங்கால வேளையிலே அதிலே சிக்கன் பக்கோடா போட்டு சுமாரா போய்கிட்டு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அந்த சுத்து வட்டாரத்துலே இப்பதான் பேமஸ் ஆயிகிட்டு இருக்கு.... சாயந்திரம் ஆனா கொஞ்சம் விடலை பசங்க எல்லாம் வந்து அங்கேயே நின்னு சாப்பிட்டு போறாங்க... பக்கத்திலே காலேஜ் வேற இருக்கிறதுனால பசங்க பொண்ணுங்கனு அங்கேயும் இங்கேயும் வண்டியிலே பறந்துகிட்டு இருப்பாங்க... அதிலேயும் பொண்ணுங்க எல்லாம் வித விதமா டிரெஸ் பண்ணிக்கிட்டு ரொம்ப மாடர்னா திரியுவாங்க...

"எப்பா! எண்ணை கொதிக்குது, அந்த சிக்கன் கறி வெச்சிருக்கிற சட்டியை கொண்டு வாப்பா" என்றான் ராசா. ஒரு பத்து பதினைந்து சிக்கன் துண்டுகளை எண்ணையில் போட்டவுடன் சட சடவென பொறிய ஆரம்பித்தது...நல்ல பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து அங்கே இருந்த தட்டில் கொட்டினான்....

"என்னப்பா! இன்னும் போனியாகவே இல்லை"னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஒரு i10 கார் சர்ரென வந்து நின்றது.... யாருடா அது நம்ம கடை முன்னாடி காருலே வந்து நிக்கிறதுன்னு பார்த்தான். கதவு திறந்து ஒரு அழகிய இளம் பெண் கண்ணில் ஒரு கூலிங் கிலாசுடன் அப்படியே சுண்டினால் ரத்தம் வர்ற கலர்லே(இங்கே ஒரு சந்தேகம்! சுண்டுனா எப்படி ரத்தம் வரும்... உடம்பு புல்லா சொரியும் சிரங்கும் இருந்தாதான சுண்டுனா ரத்தம் வரும்... ஹி ஹி ஹி!) இறங்கினாள். என்னடா இது ஒலக அதிசயமா இருக்கு, நம்ம கடைக்கு இவ்ளோ வசதியான அழகான பொண்ணு ஒன்னு வருதேன்னு வாய் பிளந்து பார்த்துகொட்டு நின்றான்.

வந்தவள் நேராக அவனிடம் வந்து "சிக்கன் பக்கோடா எவ்வளவு?" என்றாள்.

:நூறு கிராம் இருவது ரூவா" என்றான்.

 ஒரு இருநூறு கிராம் பார்சல் கொடுங்க என்றவள், பார்சலை வாங்கி கொண்டு எங்க டாமி குட்டிக்கு இந்த மாதிரி கறி ரொம்ப பிடிக்கும், அதான் வாங்கிட்டு போறேன் என்ரு சொல்லிவிட்டு காரை எடுத்து கிளம்பினாள்.

முருகேசனின் முகம் காத்து போன பலூன் மாதிரி ஆனது அவள் அப்படி சொன்னதும்... என்னடா ஒரு பொண்ணு வந்து வாங்குதே, நம்ம கடை பேமஸ் ஆகுதுன்னு சந்தோஷப்பட்டான் அவள் வந்தவுடன். ஆனால், அவள் எங்க நாய்க்குதான் வாங்குறேன் என்றவுடன் அவனின் உற்சாகம் வடிந்தது.... "அப்பா! அந்த பொண்ணு மிச்ச சில்லறை எடுக்காம இங்கேயே விட்டுட்டு போச்சு" என்றான் ராசா....

'ஒரு நிமிஷம் பாத்துக்கோடா , நான் போயி குடுத்துட்டு வர்றேன்"னு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.... ஹ்ம்ம்... அவ இந்த நேரத்துக்கு எவ்ளோ தூரம் பறந்திருப்பாளோன்னு மனசில் நெனப்பு வேறு வந்தது.... சரி இருந்தாலும் கொஞ்சம் பாத்துட்டு வரலாம்னு வண்டியை முடிந்த மட்டும் வெரட்டினான்.... அந்த ரோடு திரும்பிய உடன்  இருந்த அந்த சந்தில் அந்த கார் நின்று கொண்டிருந்தது . கார் அருகே சென்றவன் அப்படியே சிலையாக மலைத்து நின்றான்... காரினுள்ளே அந்த காரிகை, சூடாக இருக்கும் சிக்கன் பக்கோடாவை ஊதி ஊதி வேகமா தின்று கொண்டிருந்தாள்.... அவள் ஈகோவை கெடுக்க விரும்பாமல் அப்படியே திரும்பினான்...

கடைக்கு வந்தவனிடம், என்னப்பா! வந்துட்டே... அந்த பொண்ணை பாத்தியா! காசு கொடுத்திட்டியா என்றவனிடம் "இல்லடா! எப்படியும் திரும்பி ஒரு நாள் அவங்க டாமிக்கு பக்கோடா வாங்க வருவா" என்றான்.

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

20 comments:

  1. AM THE FIRST..

    ANNA.SIMPLY SUPER..

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சிவா!
    //வாங்கும் போது குருடாக இருந்த அவன் முண்டா பனியனில் இப்போது ஆயிரம் கண்கள்//

    ஹா ஹா.. ஒரே வரியில அவரோட வறுமைய சொல்லிடீங்க... ஆனா,

    //வண்டியை ஸ்டார்ட் செய்தான்...//

    தவறா எடுத்துக்க வேண்டாம்.. கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கு..

    ReplyDelete
  3. இந்த டைட்டில் ஒரு ஈர்ப்புக்காகத்தான? ;)

    ReplyDelete
  4. குருடாக இருந்த பனியனுக்குக் கண்கள் திறந்தன!!!!!!

    சூப்பர்!!!!!!

    பொழுதன்னிக்கும் 'நீ குண்டா இருக்கே. டயட் பண்ணி இளைச்சுரு'ன்னு எரிச்சலூட்டும் கணவனைப் பழிவாங்க.... மெக்டோனால்ட்ஸ் ட்ரைவ் இன் லே போய் ஃபிங்கர் சிப்ஸ் வாங்கி வண்டியிலே வச்சு தின்னுட்டு வரும் தோழி நினைவுக்கு வர்றாங்க.

    ReplyDelete
  5. @ சிவா - நன்றி!

    @ பாலா - நீங்க சொல்றது கரக்ட் தான் பாலா... டிவிஎஸ்க்கு பதிலா சைக்கிள் வெச்சிருக்கலாம்... கண்டிப்பா இந்த மாதிரி விமர்சனகள் தான் நம்மை பட்டோ தீட்ட உதவும்.

    கண்டிப்பா ஒரு ஈர்ப்புக்குதான் இந்த தலைப்பு.... பயபுள்ளைங்க தலைப்பு நல்லா இருந்தாதான உள்ளேயே வராங்க... அதுதான்... ஹி ஹி ஹி

    @ துளசி - நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...

    ReplyDelete
  6. ///...முருகேசனின் முகம் காத்து போன பலூன் மாதிரி ஆனது அவள் அப்படி சொன்னதும்... என்னடா ஒரு பொண்ணு வந்து வாங்குதே, நம்ம கடை பேமஸ் ஆகுதுன்னு சந்தோஷப்பட்டான் அவள் வந்தவுடன்.../// நல்லாயிருக்கு வித்தியாசமான நடை...

    ReplyDelete
  7. நன்றி ம.தி.சுதா வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  8. சூப்பரு.

    ReplyDelete
  9. சிவா!! கதைய கலக்கலா தான் எழுதி இருக்கீங்க !!! நண்பர்கள் சொன்ன தவறுகளை திருத்தி கொண்டு பட்டையை கிளப்புங்கள்!!!

    ReplyDelete
  10. இப்பலாம் பதிவ யோசிக்ரத விட, பதிவுக்கு தலைப்பு வைக்ரதுக்கு தான் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு..

    ReplyDelete
  11. உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது

    ReplyDelete
  12. சிம்பிளா நல்லா எழுதியிருக்கீங்க.. நல்லாயிருக்கு..

    ReplyDelete
  13. ezhuthu nadai nalla irukku thodarattum ungal pani

    ReplyDelete
  14. நன்றி சின்ன அம்மணி, பாண்டி, ராஜ், பாபு & பித்தன்!

    ReplyDelete
  15. ரொம்ப நல்லாயிருக்கு!

    ReplyDelete
  16. நல்ல கற்பனையுடன்(பனியனின் கண்கள் குருடு!) கூடிய பதிவு!

    ReplyDelete
  17. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சிவா!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!