Thursday, September 16, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்!


ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சு... கடைசியா எந்த படத்துக்கு இப்படி சிரிச்சேன்னு நினைவில்லை! இந்த படம் வெளியாகும்போது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை உடனே பாக்கனும்னு... ஆனா பாசக்கார பய புள்ளைக எல்லாரும் ஒட்டு மொத்தமா நல்லா இருக்குன்னு சொல்லவும் எப்படியாவது பாக்கனும்னு நெனச்சி கடைசியா நேத்துதான் பார்த்தேன்.. படம் முடிஞ்சி வெளியே வந்த பின்னாடிதான் யோசிச்சேன் இந்த படத்தோட கதை என்னன்னு... சத்தியமா ஒன்னும் இல்லை... அதே சமயத்திலே அந்த ஒரு நெனப்பே தியேட்டரிலே படம் பாக்கும்போது வரலை... அது டைரக்டருக்கும், அந்த நகைச்சுவைக்கும் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும்...



இந்த படத்திலே என்ன ஒரு மிக சிறப்பான விஷயம்னா, ஹீரோவுக்கு லவர் கிடையாது, பாரின் லோகேஷேன்ல பாட்டு கிடையாது, செண்டிமெண்ட் கிடையாது, ஏன் ஒரு சண்டை கூட கிடையாது! ஹீரோவோட வேலையே அவரோட நண்பன் வாழ்க்கையிலே முன்னேற ஹெல்ப் பண்றது, அப்புறம் அவன் காதலிக்கிற பொண்ணு கூட சேத்து வெக்குறது, தன்னோட கடை, குடும்பத்தையே அடகு வெச்சி அவனுக்கு பணம் கொடுக்குறது.. இப்படியா போகுது! ஏப்பா, நான் சரியாதான பேசுறேன்.... சந்தானம்தான படத்துலே ஹீரோ! யாரு சொன்னாலும் சொல்லாட்டியும் அவருதான் ஹீரோ.... சந்தானத்தோட விஸ்வரூபம் இந்த படத்தை ஆரம்பத்திலே இருந்து கடைசி வரைக்கும் தூக்கி நிப்பாட்டியிருக்கு....

ஆக மொத்தம் கதை என்னன்னா, சும்மா வெட்டியா சுத்திகிட்டு இருக்கிற பையன் காதலுக்காக உருப்படியா ஆகுறது தான்...



இப்போ படத்தோட ஒவ்வொரு கேரக்டரா பாக்கலாம்;

ஆர்யா - தயவு செஞ்சு இனிமே இவரை " தொடர் தோல்வி நாயகன்"னு குறிப்பிடாதீங்க பத்திரிகை நண்பர்களே! என்னக்கு என்னமோ "அறிந்தும் அறியாமலும்" படத்திலே பார்த்த அதே உற்சாகம், துள்ளல் ஆர்யாவிடம் இந்த படத்தில் ... அதிலும் நயன்தார கூட உள்ள காட்சிகளை விட சந்தானம் கூட வர்ற காட்சிகள்ல அமர்க்களப் படுத்துறார். எங்கே போனாலும் நம்ம "மிஷ்கின்" மாதிரி ஒரு கூலிங் கிளாஸ் வேற... நான் ரொம்ப என்ஜாய் பண்ணினது, ஆர்யா அவங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்கிற சீன், அதிலும் சித்ரா லக்ஷ்மணன்"technology has improved so much"னு  சொன்ன உடனே ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க, அப்படியே நம்ம கவுண்டரை பாத்தா மாதிரி இருந்தது..  அப்படியே இனிமே வர்ற படத்திலயும் பட்டய கெளப்புங்க பாஸ்!

சந்தானம் - சந்தானத்தை காமிக்கும்போது தியேட்டர்ல அடிச்ச விசில் சத்தத்திலே காது கிழி! நல்லதம்பிங்கிற கேரக்டர், "தளதலபதி" சலூன் ஓனர்... வடிவேலுக்கு ஒரு "வின்னர்" மாதிரி சந்தானத்துக்கு இந்த படம்... அந்த நக்கலும் நையாண்டியும் கர்ணனுக்கு கவச குண்டலும் மாதிரி சந்தானம் கூடவே பிறந்ததுன்னு நெனக்கிறேன்... சந்தானம் ஸ்க்ரீன்ல இல்லாத சீனை விரலு விட்டு எண்ணிடலாம்... "நான் கடவுள்" ராஜேந்திரன் கிட்ட கடன் வாங்கிட்டு, அப்பப்போ சாணி அள்ற மாதிரி கனவு கண்டுட்டு அழுறது "அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ". இந்த படத்தோட வெற்றியில் சந்தானத்துக்கு நிச்சயம் பெரும் பங்கு!

நயன்தாரா - ஜீரோ சைஸ்ல எனக்கு "கரீனா"வையே பிடிக்கலை... என்னத்த சொல்ல!

அப்புறம் ஆர்யாவோட அண்ணனா சுப்பு, சில காட்சிகள்ளே சூப்பர்! ஆனா பல சீன்ல நம்ம ராஜேந்திரகுமார் சொல்றா மாதிரி "ங்கே"னு முழிக்கிறார்... அண்ணியா விஜயலட்சுமி, எப்படி சிக்குனு இருந்த பொண்ணு, இப்போ பாக்க பக்குன்னு இருக்கு... அம்மாவா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் (இவங்க காட்டில இப்போ அம்மா மழை), அப்புறம் ஒரு தங்கை, எல்லாரும் அவங்களுக்கான ரோல்ல நல்லா பொருந்தி இருக்காங்க. கிச்சு கிச்சு மூட்ட சித்ரா லக்ஷ்மணன், லொள்ளு சபா சாமிநாதன், அப்புறம் அந்த குண்டு பையன், அடிக்கடி சுப்புகிட்ட உங்களுக்கு ஒரு நல்லது நடக்கலையேனு அழுற ஆள் எல்லாருமே சிரிப்புக்கு உதவி இருக்காங்க.

அந்த கண் தெரியாத பெண் டீச்சர் சில நிமிடங்கள் வந்தாலும் அந்த எபிசோடு அழகு... இன்னொரு முக்கியமான ஆளு, "நான் கடவுள்" ராஜேந்திரன்! எவ்வளவு கொடூரமா பாத்தோம் அவரை, அவருக்கு கூட புல் காமடி ரோல்... சூப்பர்!

சிறப்பு தோற்றம் ஜீவா - எப்பா எப்பா எப்பா! அப்படியே ஒரு செம டீசண்டான பையனா வந்து குவாட்டரை பாத்த உடனே வருது பாரு ஒரு ஸ்லாங்... டிபிகல் சென்னை! "மாமா ஒரு குவாட்டர் சொல்லேன்"னு சொல்லும் போது தியட்டேரிலே விசில் பறக்குது! நான் கோட் போடுறதே குவாட்டரை மறைக்கதான்னு உள்பாகாட்டிலே வரிசையா பாட்டிலை காமிப்பாரே... அள்ளுது! சூப்பர் ஜீவா!

சக்தி சரவணின் ஒளிப்பதிவு கும்பகோனத்தின் அழகை நம் கண்முன்னே நிறுத்துகிறது! பாடல் காட்சிகள் பளீர்!

யுவனுக்கு இந்த வருஷம் வரிசையா ஹிட்டு! "யார் இந்த பெண்தான்" பாட்டு சூப்பர்... மத்த பாட்டுலாம் ஓகே!

பெரிய்ய வாழ்த்து டைரக்டர் ராஜேஷுக்கு! முதல்லே இருந்து கடைசி வரைக்கும் சிரிக்கத்தான் வெக்க போறேன்... கதை கிதைன்னு ஒன்னும் கஷ்டப் பட போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டு அதை அப்படியே திரையிலே கொண்டு வந்ததுக்கு! ஏன்னா... நம்ம நெறைய படம் பாத்திருப்போம் நல்லா காமடியா போகும் படம், திடீர்னு டைரக்டர் முழிச்சிக்கிட்டு அய்யய்யோ! நம்ம படதுல்லை கதை இல்லையேன்னு எதை எதையோ திணிச்சு நமக்கு கிறுக்கு புடிக்க வெச்சிருவாங்க... நெறைய உதாரணம் சொல்லலாம் சமீப படங்களிலே கூட - காதல் சொல்ல வந்தேன், பலே பாண்டியானு நெறைய இருக்கு லிஸ்ட்! அந்த மாதிரி இல்லாம, எனக்கு என்ன வருமோ அதை நான் நிறைவா செய்வேன்னு நின்ன அந்த நம்பிக்கைக்கு ஒரு ஷொட்டு! எந்த சீன்லயும் செண்டிமெண்டே கிடையாதுங்கிரதுக்கு ஒரு சாம்பிள்! ஆர்யா வீட்டை விட்டு போகும் போது ( பேக்கிரவுண்டுல "விடுகதையா இந்த வாழ்க்கை" பாட்டு வேற) மழை கொட்டும்... அப்படியே நனைஞ்சிக்கிட்டே போவாரு, அவங்க அண்ணன் ஒரு குடையோட பின்னாடி ஓடி வருவாரு,  ஆஹா! போடுறாங்கடா "செண்டிய"னு நாம நெனப்போம்... அவரு சொல்வாரு " மழையை காரணம் காமிச்சி நீ வந்துருவே.. அதான் குடை கொண்டு வந்தென்னு".

படத்தில் சகீலா வரும் காட்சிகள் திருஷ்டிபொட்டு! வேண்டாமே பாஸ்!

அடுத்து உதயநிதியுடன் இணையும் படமும் வெற்றி பெற வாழ்த்துகள் ராஜேஷ்!

பாஸ் என்கிற பாஸ்கரன் - நிச்சயாமா பாஸ்!
 
நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

12 comments:

  1. நல்ல விமர்சனம் நண்பா..
    //படத்தில் சகீலா வரும் காட்சிகள் திருஷ்டிபொட்டு! வேண்டாமே பாஸ்!//
    திருஷ்டி போட்டு இல்ல சிவா.. திருஷ்டி பூசணிக்காய் :)

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க சிவராம்குமார்.. படம் பார்க்காதவங்களுக்கு உங்க விமர்சனத்தைப் படிச்சதுக்கப்புறம் கண்டிப்பா பார்க்கத் தோணும்..

    படத்துல "நண்பேண்டா!" அப்படின்னு சொல்றது.. ஜீவா வர்ற இடங்கள்.. இதுபோல சில இடங்கள் என்னை ரசிக்க வைத்தது.. ஆனால் கதையே இல்லாம படம் பார்க்கறது கொஞ்சம் மொக்கையாத்தான் இருந்தது..

    நல்ல விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. //திருஷ்டி போட்டு இல்ல சிவா.. திருஷ்டி பூசணிக்காய் :) //

    நல்லா சொன்னீங்க பாலா! நூறு சதம் உண்மை!

    நன்றி சித்ரா & பாபு!

    ReplyDelete
  4. நானும் இந்த படம் பார்த்து விட்டேன் நல்ல இருக்கு

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சௌந்தர்!

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி சரவணன் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  8. சிவராம்குமார், கொஞ்சம் லேட்டாதான் வந்துட்டேன். இந்தப் படத்தை மும்பை போனபோது அங்கே பார்த்தேன். உங்கள் விமரிசனம் சரியே..
    பார்த்தேன்,சிரித்தேன்,,மறந்துட்டேன்...இது நல்ல வழிமுறைங்க!

    ReplyDelete
  9. நான் என்னும் படம் பார்க்கவில்லை, உங்கள் விமர்சனத்தை பார்த்த பின்னர் பார்க்க தோன்றுகிறது. ஒரிஜினல் டிவிடி வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் :(

    ReplyDelete
  10. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தீங்க மோகன்ஜி!

    ரொம்ப ரிலாக்சா பாக்கலாம் மத்தபடி வேற எதுவும் எதிர்பாக்க வேணாம் இந்த படத்திலே!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!