Monday, September 13, 2010

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை!!!

தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாகி இன்னும் தியேட்டரிலும் தியேட்டரை விட்டும் ஓடிய படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை... குறு விமர்சனம் ஆகையால் படத்தின் எல்லா விசயத்தையும் பற்றி  எழுத போவதில்லை... பார்த்ததில் எழுத தூண்டியதை பற்றி மட்டும் இங்கே..... ;-) நான் குறிப்பிட்டு இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் ஒரு சாமானிய சினிமா ரசிகனான எனக்கு தோன்றியவை... அவ்வளவே...







பிளஸ்:

பண்டியராஜின் வளமான திரைக்கதை மற்றும் அவரது கதையில் அவருக்கு இருக்கும் ஆழமான அறிவு, படம் முழுவதும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை, சுனைனாவின் அற்புதமான உருமாற்றம் மற்றும் நடிப்பு, கஞ்சா கருப்பின் நகைச்சுவை, கிஷோர்-ன் கம்பீரம், ஜெயப்ரகாஷின் நஞ்சை விட கொடிய நயவஞ்சக நடிப்பு, அருள்நிதி - சுனைனா காதல் காட்சிகள்


மைனஸ்:
கிராமத்து திருவிழா காட்சிகளின் நீளம், அருள்நிதியின் ஒரே முகபாவம், ஒரு சமூகத்தின் அருமை பெருமைகளை நீட்டி முழக்குவது, இசை.

வம்சம் - கிராமத்து ரசிகர்கள் ரசிக்கலாம்





பிளஸ்:
சம்ந்தாவின் அழகு, அதர்வாவின் துள்ளலான அறிமுகம், நாம் இது வரை பார்த்திராத மௌனிகா, பிரசன்னாவின் அமைதியான நடிப்பு, முரளியின் சிறப்பு தோற்றம், கருணாசின் காமடி,  யுவனின் இசை(தாக்குதே, ஒரு பைத்தியம்),ரிச்சர்டின் ஒளிப்பதிவு (சில இடங்களில்).

மைனஸ்:
பத்ரி வெங்கடேஷின் திரைக்கதை, வசதியான பெண் ஏழை குப்பத்து பையனை காதலிப்பது(ரீல் அந்து போச்சுடா), கிளைமாக்சில் வலிய திணிக்கப் பட்ட சோகம்.

பானா காத்தாடி - நூல் அறுந்து இலக்கில்லாமல் !



பிளஸ்:
பூபதி பாண்டியனின் நகைச்சுவை, பாலாஜியின் அறிமுகம்(காமடி ரொம்ப சரளமா வருது பையனுக்கு), கார்த்திக் சபேஷ் வரும் இடங்கள் எல்லாம் ( யப்பா சாமி! வயிறு வலிக்குதுடா சிரிச்சி சிரிச்சி),யுவனின் இளமை துள்ளலான இசை.

மைனஸ்:
முதிர்ந்த கதாநாயகி( கதை அப்படி என்றாலும் கூட லயிக்கவில்லை), இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ் திணிக்கப்பட்ட சோகம், ஜவ்வு அறுந்து போன கதை.

காதல் சொல்ல வந்தேன் - காதல் சொல்லாத வரை நல்லா இருந்தது படம்!



பிளஸ் :
சமந்தா, சமந்தா, சமந்தா, தமனின் ஓரிரு பாடல்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மா( மூணு சமந்தா எதுக்குன்னா அப்படி மட்டும்தான் கொஞ்சம் பிளஸ் அதிகமாகும்)

மைனஸ்:
அட போங்கப்பா!

மாஸ்கோவின் காவேரி - தலைப்பு(மட்டும்) நல்லா இருக்கு!



பிளஸ்:
முதல் பாதி நகைச்சுவை தோரணங்கள்(விவேக் வரும் காட்சியை கழித்து விடவும்), ஹாப்பி பாடல், பியாவின் கவர்ச்சிகரமான அழகு, சின்ன சின்ன ஆனால் சிறப்பான வசனங்கள், விஷ்ணுவின் கேரக்டர் அமைத்த விதம், ஜான் விஜய்( அந்த தூத்துக்குடி வட்டார வழக்குக்காகவே)

மைனஸ்:
காமடி படமா அல்லது சீரியஸ் படமா என்று குழம்பும் திரைக்கதை, தேவனின் பின்னணி இசை, நகைச்சுவை என்ற பெயரில் விவேக் & செல் முருகன் வரும் பகுதிகள், ஜெயப்ரகாஷ் போன்ற நல்ல நடிகரை வீணடித்தது

பலே பாண்டியா - அப்படின்னு சொல்ல வழியே இல்லை!



பிளஸ்:

முன் பெஞ்சு ரசிகனை மட்டும் தைரியாமாக நம்பி கதை செய்த இயக்குனர், அதை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்.

மைனஸ்:
தான் ஒரு தென் இந்தியாவின் தீபா மேத்தா என்று நினைக்கும் இயக்குனர்(அவர் உணர்வுகளை வைத்து கதை செய்வார் உடலை மட்டும் வைத்து அல்ல ), வக்கிரத்தின் உக்கிரமாய் திணிக்கப்பட்ட காமக் காட்சிகள், எங்கு உலவினாலும் கலவியில் சென்று நிற்கும் கதை.

சிந்து சமவெளி - கழுதைக்கு பேரு முத்து மாலை!



***********************************************************************************


தனக்கு பிடித்தவர்களை இறைவன் விரைவில் அழைத்துக் கொள்வானாமே..... உதிர்ந்த இந்த நட்சத்திரங்களின் ஆத்மா சாந்தி அடைய அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்! அன்னார்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.


நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

17 comments:

  1. விமர்சனங்கள் ஓகே!

    ReplyDelete
  2. //பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! //

    ஆச்சு

    ReplyDelete
  3. நன்றி எஸ்.கே. & கோவி.கண்ணன்!

    ReplyDelete
  4. விமர்சனங்கள் நல்லாயிருக்கு... இதில் சொன்னா பல படங்கள் மொக்க...

    ReplyDelete
  5. விமர்சனங்கள் நல்லாயிருக்கு, ஆனா எந்த படமும் பாக்கல பாஸ் :)

    ReplyDelete
  6. குட்டி குட்டி விமர்சனதிற்கு என் வரவேற்பு!!

    ReplyDelete
  7. @ வெறும்பய - சரிதான் தல! அதனாலதான் குட்டி விமர்சனம்....
    @ பாலாஜி சரவணா - பாத்தே தீர வேண்டிய படங்கள் இல்லை இதெல்லாம்... அதனால, ஏலே டோன்ட் ஒர்ரி பீ ஹாப்பி!
    @ மதுரை பாண்டி - நன்றி பாண்டி

    ReplyDelete
  8. விமர்சனங்கள் சூப்பர்..

    ReplyDelete
  9. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மலிக்கா!

    ReplyDelete
  10. ///காதல் சொல்ல வந்தேன் - காதல் சொல்லாத வரை நல்லா இருந்தது படம்!//

    ///மாஸ்கோவின் காவேரி - தலைப்பு(மட்டும்) நல்லா இருக்கு!////

    ///பலே பாண்டியா - அப்படின்னு சொல்ல வழியே இல்லை! ///

    ///சிந்து சமவெளி - கழுதைக்கு பேரு முத்து மாலை!////

    இந்த ஒரு ஒரு.. வரியிலே..படம் பற்றி புரிந்து விட்டது...
    நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  11. //தனக்கு பிடித்தவர்களை இறைவன் விரைவில் அழைத்துக் கொள்வானாமே..... உதிர்ந்த இந்த நட்சத்திரங்களின் ஆத்மா சாந்தி அடைய அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்! அன்னார்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்///

    இன்னமும் நம்ப முடியவில்லை... இவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  12. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆனந்தி!

    ReplyDelete
  13. நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க சிவராம்குமார்..

    எல்லாம் மொக்கைப் படங்கள்.. ஒவ்வொரு படத்துக்கும் கடைசியா நீங்க சொல்ற கமெண்ட்தான் ரொம்ப நல்லாயிருக்கு..

    தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  14. எனது ப்லாக் பக்கம் வந்தமைக்கு நன்றி. இன்றுதான் உங்கள் ப்லாக் பக்கம் வருகிறேன்.... (Followed)
    பல படங்களை பற்றிய விமர்சனங்களை, பிளஸ் - மைனஸ் சொல்லி, இரத்தின சுருக்கமாக தந்து இருப்பது அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!
    தொடர்ந்து அசத்துங்க!

    ReplyDelete
  15. @ பாபு - நான் கொஞ்சம் யோசிச்சேன்... இந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்குமோன்னு... ஆனா, எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லும் போது சந்தோசமா இருக்கு... நன்றி!

    @ வித்யா - நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    @ சித்ரா - நன்றி என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கும் பாராட்டுக்கும்! நீங்களும் நம் மண்ணின் பிறப்பு என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!