Sunday, October 17, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம்!!!

திருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புதுசா ஒரு அனுபவம் கிடைச்ச மாதிரி மனசெல்லாம் துள்ளும்.... கடைசியா நான் அங்கே போனது ஒரு ஆறு மாசத்துக்கு மேலேயே இருக்கும்.... நண்பர் ஒருவர் திருமணத்துக்கு ஊருக்கு போயிருந்தப்போ அப்படியே விடுறா வண்டியைனு ஜூட்... 


சென்னைல இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல நெல்லை ரயில் நிலையத்திலே இறங்குன உடனே நண்பர் ஒருவர் புண்ணியத்தில் ஒரு தவேரா ரெடியா நின்னிச்சு... அப்படியே அங்கே இருந்து நேரா வண்டியை வெரட்டி வந்து நின்ன இடம் கல்லிடை குறிச்சி.... ஒரு இளநி வண்டியிலே ஆளுக்கு ரெண்டு இளநி அடிச்சிட்டு (என்ன ஒரு இனிப்பு.... கல்கண்டு மாதிரி இருந்தது) கெளம்பினோம்... ரெண்டு இளநி 12 ரூவாதான்... உப்பு கரிக்கிற இளநிய ஒண்ணு 20 ரூவாக்கு வாங்கி குடிக்கிறோமே நம்ம சென்னைலனு நெனக்கும் போது கொஞ்சம் வலித்தது... கல்லிடை குறிச்சில இருந்து இடப்பக்கமா திரும்பி வண்டிய வெரட்டி நேர மணிமுத்தாறு செக் போஸ்ட்ல ஒரு ஹால்ட்... அங்கே இருக்கிற வனத்துறை அதிகாரிங்ககிட்ட மாஞ்சோலைக்கு  போக அனுமதி கடிதம் வாங்கிட்டு அப்படியே மேல ஏற ஆரம்பித்தது தவேரா... வண்டிய மற்றும் அதிலே இருக்கிற எல்லா பைகளையும் மது மற்றும் பாலிதீன் கவர் இருக்கானு முழுசா சோதனை செஞ்சுதான் அனுப்பினாங்க... ஆனாலும் பய புள்ளைங்க எங்கேயோ பதுக்கி கொண்டு வந்துட்டாங்க... நிற்க--- 

தனியார் வாகனங்களில் மாஞ்சோலை செல்ல வனத்துறை அனுமதி அவ்வளவு சுலபமாக கிடைக்காது... நம்ம நண்பர் ஒருவர் முன்னாடியே அவருக்கு தெரிஞ்ச அதிகாரியிடம் சொல்லி வைத்ததால் கிடைத்தது... மாஞ்சோலைங்கிறது வனப்பிரிவிக்கு உட்பட்ட இடத்தில் தனியாரால் பராமரிக்க படுற ஒரு தேயிலை எஸ்டேட்.... அரசு பேருந்து செர்வீஸ் இருக்கு, அதிலே யாரு வேணா போகலாம்... ஆனா சுத்தி பாக்கனும்னா சொந்த வண்டிதான் வசதி....

அந்த செக் போஸ்ட்டை தாண்டினா முதல்லே நாங்க நின்ன இடம் மணிமுத்தாறு அருவி.. சும்மா தண்ணி அப்படியே கொட்டிக்கொண்டு இருந்தது...சர சரவென டிரெஸ்ஸை எல்லாம் கழட்டிட்டு, ஹல்லோஓ.... டவுசர் போட்டுருக்கோம் மக்கா... அப்படியே போயி அருவில நின்னா சும்மா தண்ணி திடும் திடும்னு நம்ம மேலே மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது... எதுக்குயா காசு கொடுத்து மசாஜ் எல்லாம்... சுகம்னா அப்படி ஒரு சுகம்... வாங்கடா நேரம் ஆச்சுனு வந்த குரலையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காம கண்ணு சிவந்துதான் வெளியே வந்தோம்... அவ்ளோ தண்ணி.... நான் அருவித் தண்ணிய சொன்னேன்!!! இங்கேயும் அருவிக்கு முன்னாடி ஒரு தடாகம் உண்டு... பக்கத்திலேயே ஒரு அறிவிப்பு பலகை "ஆழம் 80 அடி"னு... அதனால "ஆ"னு வாய திறந்து பாத்திட்டு வந்திரணும்.... அவசரப்பட்டு தண்ணிக்குள்ள இறங்குனா "ஆ"னு வாய பொளந்திர வேண்டியதுதான்...

மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு....









நீங்க மேலே பார்த்த இந்த இடங்கள் வரை எல்லாருக்கும் அனுமதி உண்டு... இதற்க்கு பின்பு மேலே தெரியிற  பாலத்தில் வனத்துறையினர் ஒரு தடுப்பு சங்கிலி போட்டிருக்கின்றனர். அங்கு நீங்கள் வாங்கிய அனுமதி கடிதத்தை காமித்தால் மட்டுமே மாஞ்சோலைப் பயணம்.. 

சுட்டெரித்த  வெயில் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இதமான குளிர்க் காத்து அடிக்க ஆரம்பிச்சது... அப்படியே நம்ம உடம்பு அந்த காத்து பட்ட உடனே மெதுவா சிலிர்க்க ஆரம்பிச்சது...ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டு வழியில் தவேரா மெதுவாக முன்னேறியது... சாலைகள் ரொம்ப பழுதடைந்ததால் மெதுவாகவே பயணப் பட்டோம்... அது கூட நல்லா இருந்தது... அது வரை புல்லா இருந்த செல்போன் சிக்னல் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது... சரியா அடுத்த அஞ்சு நிமிஷத்தில் சுத்தமா சிக்னல் காலியானது...தவேராவில் மிதமான ஒலியில் எஸ்.பி.பி. சூழ்நிலைக்கு தக்கவாறு  
பாடிக்கொண்டிருந்தார் 

" கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து; 
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்;
வெறும் காலில் செருப்பின்றி நடந்து,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்; மழலைகளாவோம் "

மீதியை அடுத்த பதிவில் தொடர்கிறேன்....


நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

25 comments:

  1. அருமையான படங்கள் சிவா..
    ரொம்ப நல்லா அனுபவச்சிருக்கீங்க..
    ம்..ம்.. நைஸ் :)

    ReplyDelete
  2. சிவா, சூப்பர். அடுத்த வாட்டி என்னையும் கூப்பிடுங்க

    ReplyDelete
  3. @ பாலா: நன்றி பாலா... அந்த இடங்கள் அப்படி... என்னை மாதிரி ஞானசூனியத்துக்கு கூட வர்ணிக்க தோணும்...

    @ கோபி: கண்டிப்பா போகலாம் கோபி... அநேகமா ஜனவரில போகலாம்னு இருக்கிறேன்!

    ReplyDelete
  4. நானும் நெல்லைக்காரன் தான் சிவா.நிறைய தடவை பாபநாசம் போனாலும் இன்னும் மணிமுத்தாறு போனதில்ல.உங்க பதிவைப் படிச்சதும் இப்போவே கிளம்பணும் போல இருக்கு!..தொடருங்கள்!

    ReplyDelete
  5. @ சரவணன் - நன்றி

    @ M.G.ரவிக்குமார்™ - சமயம் கெடச்சா கண்டிப்பா போயி வாங்க! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  6. அழகான இடமா இருக்கு..பகிர்வுக்கு நன்றி சிவா.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி!

    ReplyDelete
  8. நெகிழ்ச்சியான பதிவு! அழகான படங்கள்!

    ReplyDelete
  9. ரொம்பவும் அருமையாக இருந்தது உங்க அனுபவம். படிக்கும்போதே மாஞ்சோலைக்கு போகும் உணர்வு ஏற்பட்டது எனக்கு. ஏன்னா நானும் உங்க நெல்லை சீமைதான்.

    ReplyDelete
  10. நன்றி எஸ்.கே, ADAM & Chitra!

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணாச்சி!

    ReplyDelete
  11. படிக்க நல்ல சுவாரசியமா இருந்தது சிவா..
    படங்களைப் பார்க்கும்போதே அங்கே போகணும் போல தோனுது.. நம்மளையும் ஒருமுறை கூட்டிப்போங்க..

    ஆனா மாஞ்சோலை போட்டோக்களே இல்லையே..

    ReplyDelete
  12. Super Boss... November la manjolai plan panni irukkom... :)

    ReplyDelete
  13. @ பாபு: கண்டிப்பா போகலாம் பாபு! மாஞ்சோலை பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில் எழுதும் போது கண்டிப்பா படங்கள் இணைப்பேன்!

    @ மகேஷ் : நன்றி மகேஷ்! ஆனா நவம்பர்ல அங்கே மழை பெய்யும் சீசன்!

    ReplyDelete
  14. அருமையான படங்கள்

    ReplyDelete
  15. Nice pictures and post..

    உங்க அனுபவத்தை ஷேர் பண்ணினதுக்கு தேங்க்ஸ்.. :-))

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு அன்பரே

    ReplyDelete
  17. நன்றியோ நன்றி தியாவின் பேனா, Ananthi & dineshkumar.

    ReplyDelete
  18. என்ன அழகான அனுபவம்?

    ReplyDelete
  19. ஆம் மோகன்ஜி! மிக அழகான அனுபவம்!

    ReplyDelete
  20. நல்லா இருக்கு...
    நெல்லையிலிருந்து தமிழ்...

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!