Tuesday, August 10, 2010

ஆத்தா நான் ஆரம்பிச்சிட்டேன்!!!

ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்த விஷயம் இன்னைக்குதான் நடந்திருக்கு. பள்ளி, கல்லூரி பருவத்திலே கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கியாச்சு, சரி கொஞ்சம் வலைக்குள்ளேயும் இறங்கலாம்னு ஒரு ஆசை. (எத்தனை பேரு என்னை கொலை வெறியோட தொரத்த போறாங்களோ!)



எனக்கு தமிழ், எழுத்து, பாட்டு, சினிமா எல்லாத்திலேயும் ஆர்வம் வர காரணம் என்னோட அப்பா. சின்ன வயசுலே எங்க அப்பா கைய புடிச்சிக்கிட்டு அவர் நடிக்கிற மேடை நாடகங்கள், ஒத்திகை, சினிமாக்கள் எல்லாத்துக்கும் போற பழக்கம்தான் என் மனசுக்குள்ளேயும் ஆர்வம் வர காரணம் அவர்தான் என்னோட முதல் ஆசான்.மிக தீவிரமான இளையராஜா விசிறி அவர், அந்த தாக்கமோ என்னவோ இன்னும் இசைஞானி பாடல்களின் மீது எனக்கு ஒரு தீராத காதல்(பிற இசைஅமைப்பாளர்களின் பாடல்களை ரசித்தாலும்) . அவருக்கும் என்னோட பள்ளி தமிழ் ஆசான்களுக்கும்(திருவாளர் இராமகிருஷ்ணன், பாக்கியநாதன்) இந்த வலைப்பூ சமர்ப்பணம்.

கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும்னு சொல்ற மாதிரி, நெல்லை சீமையிலே வற்றாத ஜீவ நதி தாமிரபரணி ஓடுற பாபநாசம் எங்க ஊரு. அங்கே இந்த சிலேடை, நகைச்சுவை நையாண்டி இதெல்லாம் யாரும் சொல்லி கொடுக்க வேண்டாம் தானா வரும்; எங்க பேச்சு வழக்கிலே எப்போதும் ஒரு எள்ளல், துள்ளல் இழையோடும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தயவு செஞ்சு யாரும் இந்த பக்கத்திலே ஒரு எழுத்தாளனை தேடாதீங்க பூதகண்ணாடி வெச்சு தேடினாலும் வாய்ப்பே இல்லை. ஏலே போதும் மக்கா முதல்லேயே ரொம்ப மொக்கைய போடாதேனு நீங்க சொல்றது புரியுது, விடு ஜுட்!

8 comments:

  1. வாழ்த்துக்கள் சிவராம்குமார்.. தொடர்ந்து எழுதுங்க..

    ReplyDelete
  2. கமெண்ட் போஸ்ட் பண்றப்ப வேர்ட் வெரிபிகேசன் வருது.. அத எடுத்துவிட்டுடுங்க..

    ReplyDelete
  3. உங்களுக்கு தமிழ் மென்பொருள் தேவை என்று நினைக்கிறேன்.. சரியா நண்பரே..??

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சிவா, யாருக்கும் இடைஞ்சல் தராமல் வாழவேண்டும் என்ற கருத்து உண்மை, அதனை என்றுமே தொடருங்கள். மேலும் உங்கள் பாஷையிலே சொல்லறேன் உங்கள் கிறுக்கல்கள் அருமை.

    எதிர்காலம் பற்றிய உங்களின் எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த இணையத்தளத்தில் தேடுங்கள் உங்களுக்கு சிறந்த பதில் கிடைக்கும். www.yourastrology.co.in

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!