ஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே சென்னை தண்ணியிலே கொத்து கொத்தா கொட்டுற முடியை நானும் கூட கொஞ்சம் பிக்க ஆரம்பிச்சிட்டேன். நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... கல்லூரி பருவத்திலே கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ போட்டாச்சு.