Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Monday, October 25, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 !!!

மாஞ்சோலை பாகம் 1 & பாகம் 2 படிக்க இங்கே கிளிக்கவும்!

கடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது! அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.

Sunday, October 24, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -2 !!!

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் முதல் பதிவின் சுட்டி இது.. முதல் பாகம் வாசிக்காதவர்கள் அதை கண்டு விட்டு தொடரவும்....

இயற்கையை ரசித்துக் கொண்டே நாங்கள் பயணித்த தவேரா மெதுவா முன்னேறியது... குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே இடையிடையே இயற்கையின் அவசரத்திற்க்கும் சில இடங்களின் அழகை ரசிக்கவும் நிறுத்தி நிறுத்தி சென்றோம்.

Sunday, October 17, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம்!!!

திருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புதுசா ஒரு அனுபவம் கிடைச்ச மாதிரி மனசெல்லாம் துள்ளும்.... கடைசியா நான் அங்கே போனது ஒரு ஆறு மாசத்துக்கு மேலேயே இருக்கும்.... நண்பர் ஒருவர் திருமணத்துக்கு ஊருக்கு போயிருந்தப்போ அப்படியே விடுறா வண்டியைனு ஜூட்... 

Friday, October 15, 2010

திருநெல்வேலி சீமையிலே -3! காரையார் & பாணதீர்த்த அருவி !!!

போன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேலே மலையிலே போனா, உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு அணைக்கட்டு பாக்கலாம்...அந்த அணையோட பேரு காரையார் அணை!

Monday, September 27, 2010

திருநெல்வேலி சீமையிலே -2! அகஸ்தியர் அருவி!!!

பாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவிக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கிளைப்பாதை மேலே போகும்... அந்த படிக்கட்டுல நாம ஏரி போனோம்னா நம்ம போயி சேருற இடம் கல்யாண தீர்த்தம். இந்த இரண்டு இடங்களிலும் நாங்க பண்ணாத அட்டகாசம் கிடையாது.

Friday, September 24, 2010

திருநெல்வேலி சீமையிலே -1! பாபநாசம்!!!

வேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும்! ஹ்ம்ம்.... இதை அயல் நாட்டுலே இருக்கிற நண்பர்கள் மட்டும் இல்லை... என்னை மாதிரி எப்பவாது விடுமுறைல மட்டும் ஊருக்கு போக சநதர்ப்பம் இருக்கிறவங்க கூட சொல்லுவாங்க...