கமலஹாசனோட பிறந்த நாளில் SPB ஒரு இசைக்குழுவுடன் இணைந்து "கமல்" பாடல்களை மட்டும் பாடி ஒரு கான்சர்ட் நடந்தது. அப்பவே ராஜாவின் இசையில் இவர்கள் இணைந்த பாடல்களை ஒரு தொகுப்பா போடணும்னு நெனச்சேன்.நடுவில கொஞ்சம் பிசியானதால் அது அப்படியே விட்டு போச்சு. ஆனா சமீபத்தில கொடைக்கானல் போகும் போது, கொடை ரோட்டுல இருந்து ஹோட்டல் போற வரைக்கும் அப்படியே நான் உருகி போய்ட்டேன்....
என்னால வெளிய அந்த இயற்கை அழகை கூட ரசிக்க முடியல, அப்படி ஒரு பாடல் தொகுப்பு நாங்க போன வேன்ல! எல்லாம் ராஜா, கமல், SPB காம்பினேசன், தேவ கானங்கள்... அப்படியே மெய் மறந்து கேட்டுட்டு உக்கார்ந்திருந்தேன்... இந்த வாரம் மூணு பேரும் இணைந்த எனக்கு பிடித்த டூயட் பாடல்களில் சிலவற்றை உங்களோட பகிர்ந்துக்கிறேன். உங்களுக்கும் இதெல்லாம் பிடித்த பாடல்தான இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்!
விக்ரம் - வனிதாமணி
SPB & ஜானகி அம்மாள் இணையில அப்படி ஒரு துள்ளலான பாட்டு. கேட்டவுடனே நமக்குள்ள ஒரு உற்சாகம் வரும். அப்படி ஒரு பாட்டு!
சத்யா - வளையோசை
SPB ஒருத்தர் பாடினாலே ஒரு பெரிய விருந்து, அதில கூட சேர்ந்து லதாஜி வேற! கேக்கணுமா.... ராஜாவோட மணிமகுடத்தில் இது ஒரு வைரக்கல்!!!
காதல் பரிசு - கூ கூ என்று குயில்
SPB & ஜானகி அம்மாள் இனைந்து இன்னொரு சூப்பர் ஹிட் பாடல்
உன்னால் முடியும் தம்பி - இதழில் கதை
SPB & சித்ரா காம்பினேஷன்ல ஒரு அருமையான பாடல்... கேக்க மட்டும் இல்லாம பாக்கவும் செம பாடல்.
அந்த ஒரு நிமிடம் - சிறிய பறவை
மீண்டும் ஒரு பாடல் SPBயும் ஜானகி இணையில்... இந்த படத்தில் ராஜாவின் பாடல்களை தவிர சொல்லிக் கொள்ளும் படி வேறு ஒன்றும் இல்லை என்பது என் எண்ணம்.
புன்னகை மன்னன் - சிங்களத்து சின்ன குயிலே
ராஜாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் இந்த படம்! SPB & சித்ரா பாடிய பாடல்.
சிங்கார வேலன் ௦- இன்னும் என்னை என்ன
எனக்கு ரொம்ப பிடிச்ச டூயட்டுகளில் இதுவும் ஒன்று...SPB & ஜானகி அம்மா பாடியது...
வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல
உண்மைய சொல்லனும்னா நான் இந்த பாடல்கள் எதுக்குமே முன்னுரை கொடுக்கணும்னு அவசியமே இல்லை!
இன்னும் இது மாதிரி நெறைய பாடல்கள் இருக்கு.... எல்லாத்தையும் இங்கே சொல்ல முடியாது...அதனால எனக்கு சட்டுன்னு தோணின பாட்டு மட்டும் இங்கே கொடுத்திருக்கேன்...
நட்புடன்,
உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!
எல்லா பாடல்களும் பிடித்த பாடல்களே அந்த வளையோசை கலகலவென .........
ReplyDeleteரொம்ப சூப்பர் தல
நன்றி தினேஷ்குமார்!
ReplyDeleteஆனா தலைப்ப பார்த்து கொஞ்சம் மிரண்டு போய்ட்டங்க பின்ன
ReplyDeleteகமலும், எஸ்.பி.பியும் பின்னே ராஜாவும்!
எல்லா அருமையான பாடல்கள்!! அருமை!
ReplyDeleteசிவா! நான் அடுத்தமாசம் தான் இதைப் பார்ப்பேன்! சாமி சரணம்!
ReplyDeleteநல்ல ரசனை..நல்ல தொகுப்பு..
ReplyDeleteநல்ல தொகுப்பு சிவா
ReplyDeleteஎல்லாமே கலக்கல் பாட்டு சிவா :)
ReplyDeleteஅப்பப்போ இப்படி கலெக்சன் போடுங்க பாஸ்!
நல்ல ரசனை சிவா உங்களுக்கு.. எல்லாமே நல்ல பாடல்கள்..
ReplyDeletePresent Sir.
ReplyDeleteஅருமையா தொகுப்பு நண்பா......அடிக்கடி இப்படி பதிவிடவும்
ReplyDeleteநன்றி எஸ்.கே!
ReplyDeleteசாமி சரணம் மோகன்ஜி!
ReplyDeleteநன்றி ஹரிஸ் & nis
ReplyDeleteநன்றி பாலா! கண்டிப்பா போடலாம்...
ReplyDeleteநன்றி பாபு!
நன்றி சித்ரா!
நன்றி ரஹீம்! கண்டிப்பா பதிவிடலாம்!
டாப் ரேட்டட் கலேக்ஷேன் சிவா. அசத்தல்...
ReplyDeleteசட்டென்று என் மண்டையில் உதித்த பாடல்கள் சில...
கண்மணியே பேசு.. மௌனம் என்ன கூறு..
கடவுள் அமைத்து வைத்த மேடை...
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
கம்பன் ஏமாந்தான்...
சிப்பி இருக்குது முத்து இருக்குது..
இலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனதோ..
வந்தாள் மகாலெக்ஷ்மியே..
வளையோசை கலகலவென... ரொம்ப சூப்பர்...
ReplyDeleteநல்ல தொகுப்பு RVS! நீங்க கூட ஒரு பதிவு போடலாமே!
ReplyDeleteநன்றி குமார்!
top collection!
ReplyDelete2, 4, 6, 7 இந்த நான்கு பாடல்கள் எனக்கும் பிடித்தவை... மற்ற பாடல்களை அதிகம் கேட்டதில்லை...
ReplyDeleteவாவ்.. "வளையோசை கலகலவென...", "இதழில் கதை....", "இன்னும் என்னை..","ஜின்கள ஜிங்கா....சிங்களத்து சின்ன குயிலே...." இதெல்லாம் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல்கள்...
ReplyDeleteஎத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்... நல்ல தொகுப்பு... :-))
நன்றி ஜனா!
ReplyDeleteநன்றி பிரபாகரன்!மற்ற பாடல்களையும் கேளுங்கள் கண்டிப்பாக பிடிக்கும்...
நன்றி ஆனந்தி!
விக்ரம் - வனிதாமணி
ReplyDeleteசத்யா - வளையோசை
புன்னகை மன்னன் - சிங்களத்து சின்ன குயிலே
சிங்கார வேலன் ௦- இன்னும் என்னை என்ன///
எல்லாமே சூப்பர் சாங் அதிலும் இன்னும் என்னை என்ன போகிறாய் இந்த பாடல் சரியா இருக்கும்
செம பாட்டு அது சௌந்தர்! நன்றி!
ReplyDeleteஅருமையான பாடல்கள்!! அருமை!
ReplyDeleteநல்ல தொகுப்பு சிவா :)
ReplyDeleteஎனக்கு பாலு அவர்களின் குரலில் கமலோடு இணைந்த பாடல்களில் ,சிம்லா ஸ்பெஷல் -உனக்கென்ன மேல நின்றாய் ஒ நந்தலாலா ,மிகவும் பிடிக்கும் அட்டகாசமான பாடல் ,:).
அது என்னமோ தெரியவில்லை -பாலு அவர்களின் குரல் கமலுக்கும் ரஜினிக்கும் அருமையாக ஒத்து போகும் ,அவர்களே பாடுவது போல இருக்கும் அதுவும் கமலுக்கு துல்லியமாக பொருந்தும்
நன்றி வெறும்பய!
ReplyDeleteநன்றி dr.சுனில்! மிக அருமையான பாடல் அது... இந்த பதிவில் டூயட் பாடல்களைப் பற்றி மட்டுமே எழுதினேன்!
கேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDelete//வளையோசை கலகலவென... ரொம்ப சூப்பர்... //
ReplyDeleteசூப்பர்....
நன்றி சரவணக்குமார்!
ReplyDeleteநன்றி மனோ!
உலக சாதனைப் பாடகன் ,பாட்டு தலைவன் , பாடும் நிலா - எஸ்.பி.பி. நான்கு தலை முறை பாடகன் - இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .இவருக்கு கிடைத்த அவார்ட் பல
ReplyDeleteஅது போல் இளையராஜாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
Ilayaraja ,SPB & kamal = super hits
ReplyDeleteஉலக சாதனைப் பாடகன் SPB யின் குரல் எந்த நடிகருக்கும் பொருந்தும் வண்ணம் பாடுவார் . அது தான் 50 வருடங்களாக அவர் பாடிகொண்டிருகிறார் . எஸ்.பி.பி. யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது . இது போல்தான் உலக நாயகனும் அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது , அது போல் இசை ஞானி யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது , இவர்கள மூவரும் சாதனைப் படைத்தவர்கள்
ReplyDeleteஇந்தக் காலத்தில் பிரச்சனைகள் அதிகம் .வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக உறங்க இரவு நேர தாலாட்டாய் எஸ்.பி.பி. யின் குரல் தான் நிம்மதி தரும். இந்த பாடும் நிலா எஸ்.பி.பி. யின் குரலில் எம்மை போன்ற இளைஞர்களுக்கு கிடைக்கும் இரவு நேர தாலாட்டு என்றும் சுகமானது
ReplyDelete