வேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும்! ஹ்ம்ம்.... இதை அயல் நாட்டுலே இருக்கிற நண்பர்கள் மட்டும் இல்லை... என்னை மாதிரி எப்பவாது விடுமுறைல மட்டும் ஊருக்கு போக சநதர்ப்பம் இருக்கிறவங்க கூட சொல்லுவாங்க...
நெல்லை மாவட்டத்திலே அம்பாசமுத்திரம் தாலுகால "டாணா" தான் எங்க ஊரு. சரியா சொல்லனும்னா, பாபநாசம் கோயிலிலே இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் எங்க ஊரு. என்னடா இது பேரு "டாணா"னு நெனைக்கிறீங்களா, அதே டவுட்டுதான் எனக்கும் இருந்தது... விசாரிச்சப்போ அந்த ஏரியாவிலேயே எங்க ஊருலேதான் முதல்லே "போலீஸ் ஸ்டேஷன்" இருந்ததாம், அப்போ போலீஸ்காரங்களை எல்லாம் தாணாகாரங்கன்னு தான் சொல்லுவாங்களாம். அப்படியே, "தாணா"ங்குறது மருவி "டாணா"னு ஆயிரிச்சு... சட்டுன்னு தெரியனும்னு யாரு கேட்டாலும் பாபநாசம்தான் எங்க ஊருன்னு சொல்லறது!
அப்படி என்னயா உங்க ஊருலே சிற்ப்பு இருக்குன்னு கேக்குறவங்களுக்கு நான் என்ன சொல்ல... ஒண்ணு ரெண்டுன்னா உடனே சொல்லிடலாம்.... நெறைய இருக்கிறதால நீங்களும் இதோட சேர்ந்து வர பதிவுகளோட பயணிக்க போறீங்க....
தாமிரபரணி ஆறு பொதிகை மலையிலே உருவாகி உருண்டோடி மலையை விட்டு இறங்குற இடம் தான் பாபநாசம்! இது வரைக்கும் தாமிரபரணி ஆறு வத்தி போயி யாரும் பாத்து இருக்க மாட்டாங்க! இனிமேலும் பாக்க முடியாது.. அது மட்டும் இல்லாம இங்கே இருக்கிற கோயில்லே "பாபநாச சுவாமிகளும், உலகம்மனும்" குடி கொண்டிருக்காங்க! இந்த கோயில்லே சாமி கும்பிட்டுட்டு, கோயில் முன்னாடி இருக்கிற ஆத்துலே குளிச்சா பண்ணிய பாவம் எல்லாம் கரைஞ்சிருங்கிறது ஐதீகம்... இதுக்கு பின்னாடி கூட ஒரு கதை உண்டு(உண்மை பொய்யெல்லாம் எனக்கு தெரியாது... இது எனக்கு சின்ன வயசில் சொல்ல பட்ட கதை)! அந்த காலத்தில் ஒரு பாண்டிய மன்னன் தன் நாட்டு மக்களைஎல்லாம் புத்த மதத்திற்கு மாற சொல்லி கொடுமை செய்தானாம். சந்தர்ப்ப சூழ்நிலையால ஒரு சிறுவனும் சிறுமியும் சின்ன வயசிலே குடும்பத்தை பிரிஞ்சு தனியா வந்துர்றாங்க ... பின்னாளில் சந்திக்கிற அவங்க ரெண்டு பேரும் அவங்க அண்ணன், தங்கச்சின்னு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பின்னாடி ஒரு நாள் இந்த உண்மை தெரிய வரும்போது ரெண்டு பெரும் பெரிய பாவம் பண்ணிட்டதா நெனச்சு வருந்துறாங்க! உடனே பெரியவங்க எல்லாம் நீங்க கருப்பு உடை அணிந்து எல்லா புண்ணிய தீர்த்ததிலேயும் நீராடுங்க எங்கே உங்க கருப்பு உடை வெள்ளையாய் மாறுதோ அப்போ நீங்க செய்த பாவம் உங்களை விட்டு போயிரும்னு சொல்றாங்க!எல்லா நதியிலும் நீராடிட்டு கடைசியா பாபாநாசம் கோயில் முன்னாடி இருக்கிற தாமிரபரணிலே குளிக்கும் போது அவங்க உடை வெண்மையாய் மாறியதாம்! (நான் பல தடவை கருப்பு துணி போட்டு குளிச்சிருக்கேன் ஒரு நாள் கூட துணி வெள்ளையாகலை! அப்போதான் ஒரு முடிவுக்கு வந்தேன்... ஏலே மக்கா! அது பாவம் பண்ணவங்களுக்குதான் நீ சொக்க தங்கம்லேன்னு!)
கீழே நீங்க பாக்குறதுதான் அந்த பாபநாசம் கோவில்! நேரிலே போக முடியாவதங்க இந்த போட்டோவை பாத்தே உங்க பாவத்தைஎல்லாம் போக்கி கொள்ளுங்கள் ;-)!
இந்த கோயில் வாசலிலே ஒரு கல் மண்டபம் இருக்கு! கொஞ்ச நேரம் அதிலே உக்காந்தா போதும் ஜிலு ஜிலுன்னு அடிக்கிற காத்தும், அந்த மண்டபத்தோட குளிர்ச்சியும் அப்படியே எவ்ளோ சுறுசுறுப்பா இருக்கிறவனையும் கொஞ்ச நேரத்திலே தூங்க வெச்சிரும்! முதல்லே கொஞ்சம் அந்த மண்டபத்தோட தூணுல சாயலாம்னு தோணும்.. அப்புறம் லைட்டா காலை நீட்டலாம்னு தோணும்... அப்புறம் வரும் பாருங்க ஒரு முரட்டுத்தனமான தூக்கம்.... எப்பா எப்பா எப்பாஆ !!!! அந்த மண்டபத்துக்கு செல்லமா சோம்பேறி மண்டபம்னு கூட பேரு உண்டு! ஏன்னா எங்க ஏரியா வெட்டி ஆபிசருங்க எல்லாம் அங்கேதான் ரெஸ்ட் எடுப்பாங்க!
அப்படியே சோம்பேறி மண்டபத்தை விட்டு கீழே இறங்குனா பாபநாசம் படித்துறை... அப்படியே கீழே சல சல சங்கீதம் எழுப்பிக்கிட்டு ஓடுற ஆறு! அந்த தண்ணியை ஒரு வாய் அள்ளி குடிச்சீங்கன்னா அப்படி ஒரு சுவை...."என்ன சுவை! என்ன சாறு! என்ன கனிரசம்"னு சொல்ற "juicy fruit " சூயிங்கம்மை விட சுவை ஜாஸ்தி!சோம்பேறி மண்டபத்திலே சோம்பேறி ஆனவங்க எல்லாம் இங்கே அப்படியே உல்டாவா ஆயிருவாங்க! சோம்பல்லாம் இருக்க இடம் தெரியாம போயிரும்... அதிலேயும் நாங்கலாம் அங்கே பண்ற வீர சாகசத்தை பாத்தாங்கன்னா அவ்ளோதான்! ரெண்டு, ஹூஊம்ம்ம்ம் ஒரு பொண்ணு இருந்தா கூட போதும்... அடிப்போம் பாரு ஒரு டைவு... எப்போதும் குறைஞ்சது ஒரு அஞ்சு பேராவது போவோம்... நம்மளுக்கு அந்த ஆத்தோட ஒவ்வொரு கல்லும் மண்ணும் அப்படியே தெரியும்.... அதனால நம்ம பண்ற சாகசத்தை பாத்து எங்க ஊருலே இருக்கிற குரங்குகள் கூட மூக்குலே விரலு வெக்கும்...
தாமிரபரணி ஆறோட சில படங்கள் உங்க பார்வைக்கு!
அடுத்த பதிவிலே அகத்தியர் அருவி, கல்யாண தீர்த்தம் மற்றும் பான தீர்த்தத்தை பற்றி பார்க்கலாம்!
நட்புடன்,
உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்!
Lovely....... Now, I miss Nellai area!
ReplyDeleteகண்டிப்பா இருக்கும் அந்த உணர்வு! கடைசியா எப்போ ஊருக்கு போனீங்க?
ReplyDeleteபாவநாசத்தை நேர்ல பார்த்ததுபோலவே இருக்கு.
ReplyDeleteபடங்கள் ரொம்ப அழகு.
வருகைக்கு நன்றி சுந்தரா!
ReplyDeletesuper boss. Kalakkunga
ReplyDeleteபாபநாசம் ஒரேஒரு முறை வந்திருக்கேன், ரொம்ப வருஷம் முன்னால...ரொம்ப நல்லா இருந்தது :)
ReplyDeleteஅதபத்தி தெரிஞ்சுக்க ஆசை.. வெய்டிங் அடுத்த பதிவுக்கு...
இன்னும் நிறைய படங்கள் இணையுங்கள் பாஸ்!
anna suppera erukku
ReplyDeleteenaku romba pidicha orru nellai,avanga pesum nelai tamil..yeela engitu vaala..
nalathamula eluthura..appdinu paasathoda pesrathu pidikum..
next padivukga waiting...
நன்றி கோபி, பாலா & சிவா!
ReplyDeleteஏலே மக்கா! அது பாவம் பண்ணவங்களுக்குதான் நீ சொக்க தங்கம்லேன்னு!)//
ReplyDeleteஅப்படிப் போடு !!
பாபநாசம், காரையார் எல்லாம் போயிருக்கேன். ஆனால் பதிவில் படிக்கும் போது, படங்களை பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது.
ReplyDeleteஏலே மக்கா! அது பாவம் பண்ணவங்களுக்குதான் நீ சொக்க தங்கம்லேன்னு!) பாசக்காரபயலுக!!!!..:)
ReplyDelete// முதல்லே "போலீஸ் ஸ்டேஷன்" இருந்ததாம், அப்போ போலீஸ்காரங்களை எல்லாம் தாணாகாரங்கன்னு தான் சொல்லுவாங்களாம். அப்படியே, "தாணா"ங்குறது மருவி "டாணா"னு ஆயிரிச்சு... சட்டுன்னு தெரியனும்னு யாரு கேட்டாலும் பாபநாசம்தான் எங்க ஊருன்னு சொல்லறது!//
ReplyDeleteஅட பெயர்க்காரணம் நல்லா இருக்குங்க..!!
கதை அருமையா இருக்கு ..!!
ReplyDelete/// அது பாவம் பண்ணவங்களுக்குதான் நீ சொக்க தங்கம்லேன்னு!)//
நல்லா சமாளிக்குரீங்க ..!!
//அடுத்த பதிவிலே அகத்தியர் அருவி, கல்யாண தீர்த்தம் மற்றும் பான தீர்த்தத்தை பற்றி பார்க்கலாம்!//
ReplyDeleteகண்டிப்பா பார்க்கலாம் ..!!
பாபநாசம் நல்லாக இருக்கு.
ReplyDelete....தாமிரபரணி தண்ணி எடுத்து சேர்த்துசெஞ்ச பொம்மை....ஞாபகம் வருகிறது.
//அப்புறம் வரும் பாருங்க ஒரு முரட்டுத்தனமான தூக்கம்.... எப்பா எப்பா எப்பாஆ !!!! அந்த மண்டபத்துக்கு செல்லமா சோம்பேறி மண்டபம்னு கூட பேரு உண்டு! ஏன்னா எங்க ஏரியா வெட்டி ஆபிசருங்க எல்லாம் அங்கேதான் ரெஸ்ட் எடுப்பாங்க!
ReplyDeleteகுரங்குங்க சும்மா விட்டுடுமா என்ன?//
என்னுடைய பல favorite கோவில்களில் இந்த பாபநாசம் சிவன் கோவிலும் ஓன்று. அந்த முன்னால் ஓடும் தாமிரபரணியின் அழகு சொல்லி மாளாது. அந்த ஊர் மக்களைப் பார்த்தால் பொறாமையா இருக்கும். இந்த ஆத்தில தினமும் குளிக்கிராங்களேன்னு
பாடல்களில் மடடம் கேட்ட ஊர்களை நேரில் காட்டிவிட்டீர்கள் நன்றி..
ReplyDelete@ நாய்க்குட்டி மனசு : பிட்டு பிட்டா போடா வேண்டியதுதான்.... வேற வழி!!!
ReplyDelete@அம்பிகா :நம்ம நினைவுகள் எப்போதுமே திரும்ப ஒரு முறை அசை போடப்படும் போது இன்னும் அழகாகும்....
@தக்குடுபாண்டி : ரொம்ப பாசக்கார பயலுக!
@செல்வக்குமார்: சமாளிக்கலன்னா நம்ம மக்கள்கிட்ட தாக்கு பிடிக்க முடியுமா!!!
@மாதேவி:நன்றி மாதேவி!
@விருட்சம்: குரங்குலாம் இவுங்களை பாத்து பயப்படும்... நீங்க வேற! கண்டிப்பா எனக்கே இப்போ பொறாமையா இருக்கு நான் சென்னைல இருப்பதால!
@ சுதா: நீங்களே நேரில் பார்த்தால் இன்னும் அழகு!
ReplyDeleteஉங்கப் பதிவைப் பார்த்ததும் இந்த இடங்களுக்கெல்லாம் நண்பர்களுடன் இலக்கியம் பேசிக் கொண்டு திரிந்த நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. பாண தீர்த்தம், சொரி முத்தய்யனார் கோயில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பதிவுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteகண்டிப்பாக மறக்க முடியாத இடங்கள் அவை! அதுவும் நல்ல நட்புடன் பயணிக்கும் போது இன்னும் அழகான நினைவுகள் தரும்!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி சங்கரலிங்கம் அவர்களே! நான் பள்ளி படிப்பை PLWA-ல் முடித்தேன்!
ReplyDeleteகாரையாறு, சொரிமுத்தய்யனார் கோவில் இதெல்லாம் மறக்க முடியுமா? பேராண்மை படம் பாக்குற மாதிரி இருக்கும். விகடன்ல பான தீர்த்த அருவி வச்சு கிருஷ்ணவேணி கதை வந்துச்சே
ReplyDeleteஎப்ப சேரன்மகாதேவி பத்தி எழுதப்போறீங்க?
ReplyDeletei miss my palay :(
ReplyDelete@ பாலா: கண்டிப்பா அந்த இடங்கள் எல்லாம் மறக்க முடியாது.வருகைக்கு நன்றி!
ReplyDelete@ Denzil: கண்டிப்பா எழுதலாம்!வருகைக்கு நன்றி!
@Zen The Boss: வருகைக்கு நன்றி!
அருமையான பகிர்வு.தொடர்ந்து எழுதுங்க.எனக்கு எல்லாமே பிடித்த இடங்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி asiya omar!
ReplyDeleteஎன் ஊரை உங்கள் எழுத்துகளில் பார்ப்பது மிக சந்தோஷம். கருப்பு பேக்கிரவுண்டில் வாசிக்க ரொம்ப சிரமமா இருக்குது, மாத்தினா நல்லது.
ReplyDelete@ ஹுஸைனம்மா - நீங்களும் நம்ம ஊருன்னு தெரியும்போது மகிழ்ச்சி! எனக்கு மிகவும் பிடித்த கலர் கருப்பு... அதனாலதான் இந்த டெம்ப்ளேட்!
ReplyDeleteI still remember my joyful times when i was a kid going to Dana. Even though i grew up in Madras most of my summer holidays i spent it in Dana. My uncle and Grandpa (BOTH Koilpillai were teachers in st marrys school)
ReplyDeleteI am so happy to read about the place that will always be in my mind
super boss
ReplyDeleteNeenga nature-a romba love pantreenga pola.. unga explanation romba nalla irukku...
ReplyDelete