Saturday, August 28, 2010

விளம்பரங்களும் நிதர்சனங்களும்! (18+ மட்டும்)

குடும்பத்தோட படத்துக்கு போகும் போது நல்ல படமா இது, குழந்தைகளோட போயி பார்க்கிற அளவுக்கு தரமானதுதானான்னு நாலு பேர்கிட்ட விசாரிக்கிறோம் அப்படியும் இல்லன்னா இருக்கவே இருக்கு சென்சார் போர்டு செர்டிபிகேட் அதை வச்சு கண்டு பிடிக்கலாம் ( ஓரளவுக்காவது! என்ன நான் சொல்றது.....)



ஆனா வீட்டுலே டிவி பாக்கும்போது வர சில விளம்பரங்கள் நம்மையே நெளிய வெக்குது இதிலே அதை பாத்து சின்ன பசங்க கேள்வி வேற கேட்டாங்கன்னா அவ்ளோதான் நம்ம நெலம.... என்னத்த சொல்ல... பரவலா வெளிநாடுங்கள்ளே வர்ற விளம்பரங்கள் நெறைய பாத்திருக்கேன்(ஈ-மெயில்களுக்கு நன்றி!) அதிலே கொஞ்சம் அப்படி இப்படி விளம்பரங்கள் இருக்கும்...

எனக்கு வந்த ஈ-மெயிலில் ஒரு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது... ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், அதிலே ஒருவன் தன் மகனுடன் (ஒரு அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும் ) பொருட்கள் வாங்கி கொண்டு இருப்பான். அந்த பையன் அங்கும் இங்கும் துறு துறுன்னு ஓடுவான், அடுக்கி வெச்சு இருக்குற பொருள் எல்லாத்தையும் இழுத்து கீழே போடுவான். அவனை விட சின்ன வயசு பசங்களிடம் வம்பு செய்வான். கடைசியா ஏதோ வாங்கி தர சொல்லி கேப்பான் அப்பா முடியாதுன்னு சொன்ன உடனே கூடையிலே எடுத்து வச்ச எல்லாத்தையும் கீழே எடுத்து போட்டுட்டு தரையிலே படுத்துட்டு கையையும் காலையும் உதைச்சிகிட்டு அழுவான். அந்த அப்பா என்ன செய்யுறதுன்னே தெரியாம 'பே' ன்னு முழிச்சிக்கிட்டு இருக்கிற மாதிரி காமிப்பாங்க... அந்த சீன் அப்படியே பிரீஸ் ஆகி "யூஸ் காண்டம்ஸ்" அப்படிங்கிற லெட்டர்ஸ் வரும்... பாத்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்... ஆனாலும் அந்த மேக்கிங் ரொம்ப அழகா இருந்தது....

ஆனா இப்போ நம்ம ஊருலேயே டிவிலே வர்ற சில விளம்பரங்கள் அதிலும் குறிப்பா இந்த பாடி ஸ்பிரே விளம்பரங்கள் அய்யோ என்னத்த சொல்ல... என்னமோ அந்த ஸ்பிரே அடிச்சவுடனே எல்லா பொண்ணுங்களும் அப்பா, அம்மா, புருஷன் எல்லாரையும் விட்டுட்டு வந்திருவாங்க அப்படிங்கிற மாதிரிதான் இருக்கு (நாங்களும்தான் அடிக்கிறோம், ஒண்ணும் நடக்கலைங்கிற வயித்தெரிச்சல் வேற!).எனக்கு என்னமோ கண்டிப்பா விளம்பரங்களுக்கும் ஒரு கட்டுப்பாடு அல்லது வரைமுறை அவசியம்னு தோணுது... சில விளம்பரங்களை நீங்க பாத்தா உங்களுக்கும் கண்டிப்பா தோணும்.

இந்த விளம்பரத்தில் ஒரு மாணவன் பாடி ஸ்பிரே அடித்து வருகிறான், கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியைக்கு(!!!) அவன் உள்ளே வந்த உடன் அந்த வாசனைய நுகர்ந்தவுடன் அவளால எழுத முடியவில்லை, உதட்டை கடிக்கிறாள், வேகமாக மூச்சு வாங்குகிறாள், எழுதுவதை விட்டு அவளுடைய இதய துடிப்பை வரைகிறாள்.... என்ன கொடுமை டா இது...




இன்னொரு விளம்பரத்தில் ஒரு உணவகத்தில் ஒரு காதலன் காதலிக்கு ப்ரொப்போஸ் செய்து மோதிரம் ஒன்றை அவள் விரல்களில் அணிவிக்கும் போது அந்த ஸ்பிரே அடித்த பையன் வருகிறான்... உடனே அந்த பெண் ஹார்னியாக சில முகபாவம் காட்டுகிறாள்... அந்த மோதிரத்தை ஒரு இகழ்ச்சியான முகசுளிப்புடன் எறிகிறாள்... இதுவல்லவோ காதல்... கீழே சில விளம்பரங்களின் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறேன்.... இந்த காட்சிக்கு வசனம் தேவை இல்லைன்னு நான் சொல்ல வேணாம், நீங்க பார்த்தாலே தெரியும்!









இதெல்லாம் கூட பரவா இல்லை .... இப்போ சமீபத்திலே பார்த்த விளம்பரம் சில, என்னடா கலாசாரம் புடலங்கா! எங்க பாடி ஸ்பிரே அடி.... எல்லா பொண்ணுங்களையும் புடின்னு சொல்லாத குறைதான்... அட தேவுடா! அதிலே ஹைலைட்டே அவங்களோட caption தான்... "it happens"....








இன்னொரு விளம்பரம் பார்த்தேன்... நெறைய நாடுகள்லே இந்த விளம்பரத்துக்கு தடை போட்டுட்டாங்கனு கேள்வி... நல்ல வேலை இதை இன்னும் நம்ம ஊரு டிவில போடலை....

இது கண்டிப்பா வயது வந்தவர்களுக்கு மட்டும்... இதை இங்கே பகிர்ந்ததோட நோக்கம், இப்படியெல்லாம் விளம்பரம் வருதுன்னு நீங்க தெரிஞ்சிகத்தானே தவிர வேற எதுவும் இல்லை... ஒன்லி சமூக அக்கறை.... நம்புங்கப்பா ப்ளீஸ்.... இந்த குழந்தையை யாரும் தப்பா நெனச்சிராதீங்க....





நட்புடன்,

சிவராம்குமார்

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்(இன்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்)! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

---------------------------------------------------------------------------------------

5 comments:

  1. அடபாவி...கஸ்டமர் இல்லாம தன்னோட கடையிலே தானே டீ போட்டு குடிக்கிற அப்புக்குட்டி மாதிரி ஆயிடிச்சே என் நிலைமை... ஒரு கமெண்ட் கூட இல்லையே....

    ReplyDelete
  2. Axe அடிச்சு பொண்ணுங்க தான் வரலை. அத படிக்கறதுக்கு கூட யாரும் வரலையா? ரொம்ப வருத்தப்படாதீங்க.. இதோ ஒரு கமெண்ட்! நல்லா எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  3. படிக்க கொஞ்ச பேரு வந்திருக்காங்க.... கமெண்ட்தான் யாரும் கொடுக்கலை... நன்றி பந்து!

    ReplyDelete
  4. நிறைய முறை இந்தப் பிரச்சனையைப் பத்தி பேசியாச்சு. ஒரு தீர்வு தான் இன்னும் கிடைக்கல. டி.விக்கு ஒரு சென்சார் போர்டு இருந்தா?

    ReplyDelete
  5. கண்டிப்பா தேவை மகேஷ்! உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!