Saturday, October 2, 2010

இளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை!!!

 சின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற "கண்ணன் ஒரு கைக்குழந்தை" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா  அழுகைய நிறுத்திட்டு  சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற "சினி சிட்டி" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ்! அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக!னு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது!)



மேற்க்கத்திய இசை அந்த அளவுக்கு தமிழ் நாட்டுலே பிரபலமாகாத சூழல்லே கூட நம்ம ராஜா ஒரு ராஜாங்கமே நடத்தி இருப்பார். அதிலே எனக்கு பிடித்த சில பாடல்கள் இங்கே உங்களுக்காக! அந்த ராகம் சூப்பர், இந்த தாளம் சூப்பர், இந்த வாத்திய கருவியை நல்லா யூஸ் பண்ணிருப்பார் அப்படினெல்லாம் சொல்லுவேன்னு எதிர் பாக்காதீங்க... ஏன்னா எனக்கு அதெல்லாம் தெரியாதே ;-).....

அக்னி நட்சத்திரம் - ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா

இந்த பாட்டு அந்த காலகட்டத்திலே ஒரு "revelation "னே சொல்லலாம். எந்த திருவிழான்னாலும் எந்த விஷேசமானாலும் ஒரு பொடிப்பய்யன் இந்த பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருப்பான்.இப்போ கூட யாரு கேட்டாலும் நம்மளை அறியாம ஒரு சின்ன டான்ஸ் வரும்! அதுதான் ராஜா!



அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை 

என்ன சொல்ல இந்த பாட்டை பற்றி! சூப்பர் ஸ்டாரோட ஸ்டைல், மலேசியா வாசுதேவனோட அருமையான குரல் அதை அழக்காக ப்ரெசென்ட் பண்ணிய விதம்! இளையராஜாவோட துள்ளிசை பாடல்களில் இதுக்கு என் இதயத்தின் மிக அருகாமையில் இடம்!


தளபதி - ராக்கம்மா

சூரியனுக்கு டார்ச் தேவை இல்லை!



தங்க மகன் - வா வா பக்கம் வா & பூமாலை ஒரு பாவையானது

எஸ்.பி.பியோட குரலும் இளையராஜாவோட இசையும் என்னைக்குமே வெற்றிக் கூட்டணி. அதிலும் ஒரே படத்துல ரெண்டு பாட்டு ஆட்டம் போட வெக்கிற பாட்டு. கேட்டுப் பாருங்க!



விக்ரம் - விக்ரம்

இந்த பாட்டை கேக்கும் போதே எனக்கு தொண்டை எல்லாம் வலிக்கும். அப்போ இந்த பாட்டை பாடின கமலுக்கு எப்படி இருந்திருக்கும். குரலில் அபப்டி ஒரு ஆளுமை.... அதை சரியா உபயோகப்படுத்தினதுல நிக்குறார் நம்ம ஞானி!

(இந்த பாட்டோட தமிழ் வீடியோ கிடைக்கலை!)

கமல் படங்களின் சில பாடல்கள் 

கமல் ஹாசன் படம் - டிஸ்கோ டான்ஸ் பாட்டு - இளையராஜா மியூசிக் - எஸ்பிபி குரல் இதுக்கு மேலே நமக்கு என்ன வேணும்! அப்படி என்னை கவர்ந்த சில பாடல்கள் இதோ....





நல்லவனுக்கு நல்லவன் - வெச்சுக்கவா

ஒரிஜினல், பின்னே ரீமிக்ஸ் எல்லாத்திலேயும் கலக்கிய பாடல்... ஆனாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்! சீரியல் லைட் போட்ட ட்ரெஸ்ஸும் அந்த டிஸ்கோ லைட் ப்ளோர் எல்லாம் சேர்ந்து ஒரு  செம பீல் கொடுக்கும்!



எல்லா பாட்டையும் பத்தி எழுதுனா இந்த மேட்டர வெச்சே இன்னும் ஒரு நூறு பதிவு எழுதலாம். அதனால சட்டுன்னு என் மனசுக்கு தோணிய பாட்டை மட்டும் இங்கே கொடுத்திருக்கேன்! உங்களுக்கு பிடிச்ச ராஜாவோட துள்ளிசை பாடல்களில் இந்த பாடல்களும் இருக்கான்னு பின்னூட்டத்திலே சொல்லுங்க!

நட்புடன்,

உங்கள் நண்பன் சிவா

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

15 comments:

  1. அட..கலக்கிய பாடல்கள் வைத்து கலக்கலான பதிவு. நன்றாக இருந்தது சிவா

    ReplyDelete
  2. புன்னகை மன்னன பாடல் பிடிக்கும்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு சிவா...
    ஆசை நூறு வகை.. நூறு தடவை கூட கேக்கலாம் பாஸ்!

    ReplyDelete
  4. நன்றி கோபி, பாலா & டெனிம்!

    ReplyDelete
  5. நல்ல பதிவு சிவா.. எல்லாமே கலக்கலான பாடல்கள்..

    ReplyDelete
  6. சிவா! மெலடி பாடல்கள் பற்றியும் போடுங்கள்

    ReplyDelete
  7. அட டா எல்லாமே சூப்பர் பாட்டு

    ReplyDelete
  8. நன்றி பாபு & சௌந்தர்

    கண்டிப்பா பண்ணலாம் அருண் பிரசாத்

    @ஈரோடு தங்கதுரை - என்னது கருத்துக்களா!!!!???? எங்கேப்பா?

    ReplyDelete
  9. வாவ்.. நல்ல பகிர்வு.. தொடருங்க.. :-))

    ReplyDelete
  10. இளையராஜாவும் ரஜினியும் சேர்ந்து கலக்கி இருக்கும் பாடல்கள் - சான்சே இல்லை!

    ReplyDelete
  11. நன்றி ஆனந்தி & சித்ரா!!!

    ReplyDelete
  12. இளையராஜாவை எந்த இசை விரும்பிகளுக்கு தான் பிடிக்காது சிவா... தாவணி கனவுகள் படத்தில் கூட ஒரு நாயகன் உதயமாகிறான்,நீங்கள் கேட்டவை படத்தில் செம சாங்க்ஸ் irukke..ஏன் சொல்லலை..சொல்லலை..அதெல்லாம் மாஸ்டர் பீஸ் ஆச்சே...

    ReplyDelete
  13. அருமையான பாடல்கள் அவை ஆனந்தி! ஆனால் நான் முன்பே கூறியது போல் //எல்லா பாட்டையும் பத்தி எழுதுனா இந்த மேட்டர வெச்சே இன்னும் ஒரு நூறு பதிவு எழுதலாம். அதனால சட்டுன்னு என் மனசுக்கு தோணிய பாட்டை மட்டும் இங்கே கொடுத்திருக்கேன்!//

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!